மெட்ரோ ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. முக்கிய அப்டேட்டை அறிவித்த CMRL! தெரிஞ்சுக்கோங்க
சென்னை: மெட்ரோ இரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றம் செய்யப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஏற்கெனவே இதற்காக 2 மாத காலம் அவகாசமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் இது முழுமையாக நடைமுறைக்கு வரும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையின் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும்.
பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்சமதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மெட்ரோ ரயில்களில் பயணிக்க கடந்த 2015ம் ஆண்டு CMRL பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டையை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், சென்னை முழுக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த 'சிங்கார சென்னை அட்டை' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அட்டையை பயன்படுத்தி சென்னையின் பேருந்துகளிலும், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களிலும் டிராவல் செய்ய முடியும். எனவே இந்த அட்டையை மெட்ரோ ரயில் பயணிகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு குறித்து அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. ஏப்.1ம் தேதி முதல் பழைய CMRL அட்டை உபயோகப்படுத்த முடியாது என்றும், அதற்கு மாற்றாக புதிய அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், இந்த அட்டையில் ரூ.2000வரை ரீசார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் திடீரென அட்டையை மாற்ற சொன்னால் என்ன அர்த்தம்? ரீசார்ச் பணம் திருப்பி தரப்படுமா? அல்லது புது அட்டையில் அது வரவு வைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மெட்ரோ நிறுவனம் தரப்பில் சரியான பதில் இல்லாததால் ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் புது அட்டையில் பழைய அட்டையின் தொகை வரவு வைக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்திருப்பது பயணிகளிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications