மெட்ரோவில் இலவசமாகவே பயணிக்கலாம்.. சென்னையில் சூப்பர் ஆபர்.. முதலில் இதை படிங்க.. ஆஹா அதிரடி!
சென்னை: மெட்ரோவில் மக்கள் இலவசமாக பயணம் செய்ய ப்ரோமோஷன் டிக்கெட் என்னும் வசதியை கொண்டு வர மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.

தற்போது சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது.

மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள மக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. மெட்ரோவில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு மட்டும் இந்த பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
ஆனால் எல்லா நாட்களுக்கும் இல்லாமல் குறிப்பிட்ட நாட்களுக்கு பயணிக்கக் கூடிய வகையில் இந்த டிக்கெட். இலவச மற்றும் கட்டண சலுகையிலான டிக்கெட் வழங்கப்படும். உதாரணமாக பண்டிகை நாட்களில் இந்த Promotional tickets வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விலாசம் மெட்ரோவில் இருந்து 5கிமீ தூரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ வாட்ஸ் ஆப்: சமீபத்தில்தான் மெட்ரோவில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. இதை ஒரு நாள் முழுக்க ஒரு முறை பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கு வழங்க முடியும்.
பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் கூட வரும் காலங்களில் இந்த டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது.
சிங்கிள் டிக்கெட்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுண்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications