சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. அப்படியே ஆட வைக்கும் செய்தி!
சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய இ ஆட்டோ சேவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை தற்போது எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 4 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டிட வேலை, கட்டிடக்கலை உட்பட, இயந்திரம், மின் மற்றும் பிளம்பிங் (MEP), காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) மற்றும் அனைத்து தொடர்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பி. ராம்பிரசாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பயணிகள் எண்ணிக்கை: சென்னையில் மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. தற்போது சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
புதிய வசதிகள்: இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள மக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. மெட்ரோவில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் வசிக்கக்கூடிய மக்களுக்கு மட்டும் இந்த பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.ஆனால் எல்லா நாட்களுக்கும் இல்லாமல் குறிப்பிட்ட நாட்களுக்கு பயணிக்கக் கூடிய வகையில் இந்த டிக்கெட் டிக்கெட். இலவச மற்றும் கட்டண சலுகையிலான டிக்கெட் வழங்கப்படும். உதாரணமாக பண்டிகை நாட்களில் இந்த Promotional tickets வழங்க திட்டமிட்டபப்ட்டு உள்ளது.இதற்கு உங்கள் ஆதார் அட்டையில் உள்ள விலாசம் மெட்ரோவில் இருந்து 5கிமீ தூரத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ஆட்டோ: தற்போது மெட்ரோவை அருகில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுடன் இணைப்பதற்காக இ ஆட்டோ சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது பேட்டரி மூலம் இயங்கும் ஆட்டோக்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆட்டோக்களை எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் கொண்டு செல்ல மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதாவது இப்போது சில மெட்ரோக்களில் மட்டுமே இந்த சேவை உள்ளது. இதை மாற்றிவிட்டு எல்லா மெட்ரோ மெட்ரோ நிலையங்களுக்கும் இந்த இ ஆட்டோ சேவையை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் நீங்கள் உள்ள பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications