அண்ணாசாலையில் திடீர்னு என்னாச்சு? சென்னையில் "திருப்பிவிடப்படும்" வண்டிகள்.. வாகன ஓட்டிகளே கவனியுங்க
சென்னை: சென்னை மாநகரில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. என்ன காரணம்?
சென்னையின் அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போலவே, மெட்ரோ ரயில் வழித்தடத்தையும் இணைத்தாக வேண்டியுள்ளது... இதற்கான மெட்ரோவின் 2ம்கட்ட விரிவாக்க பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன

சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன.
போக்குவரத்து மாற்றம்: இதனிடையே மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டப்பட உள்ளது. இதையொட்டி, கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்தில் அவ்வப்போது மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன..
சமீபத்தில் கடந்த 3-ம் தேதி சோதனை முயற்சியாக சில சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதுபோலவே, இப்போதும் சென்னையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக, மெட்ரோ கட்டுமான பணிக்காக (இன்று, நாளை) மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா மேம்பாலம்: இதையொட்டி அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதன்படி சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படும்.
அதேபோல, ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், எம்ஜிஆர் சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைந்தகரை செல்லும் வாகனங்கள் டேங்க் மண்ட், நெல்சன் மாணிக்கம் சாலை வழியை பயன்படுத்தலாம் என்றும் போக்குவரத்து துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications