சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து 4 பேர் காயம்.. பிரேக் அடித்த போது விபத்து.. பயணிகள் ஷாக்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக் அடித்த போது ஏற்பட்ட இந்த விபத்தில் 4 பயணிகள் காயம் அடைந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம், விம்கோ நகர் - கோயம்பேடு வழியாக பரங்கிமலை என இரண்டு முக்கிய வழித்தடத்தில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருக்கிறது.

2 வது கட்டமாக தொடர்ந்து மாதவரம் - சிறுசேரி, மாதவரம் பால்பண்ணை -சோழிங்கநல்லூர், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் என 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் அமைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல மெட்ரோ ரயில் அமைந்துள்ளதால் அதில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கண்ணாடி உடைந்து சிதறியது: மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்ட போது வெறிச்சோடி காணப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது பீக் நேரங்களில் புறநகர் ரயில்களுக்கு நிகராக கூட்டம் நிரம்பி வழிகிறது. சரியான நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விட முடியும் என்பதால் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட தற்போது மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணம் செய்ய முடிவதை பார்க்க முடிகிறது.
பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் எப்போதும் மெட்ரோ ரயில்கள் பரபரப்பாகவே காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து 4 பயணிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரேக் அடித்த போது மெட்ரோ ரயிலின் உள்பகுதியில் கண்ணாடி உடைந்து பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
போலீசார் விசாரணை: மெட்ரோ ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்த போது கண்ணாடிகள் உடைந்து ரயிலுக்குள் சிதறியுள்ளது. இதில் ரயிலில் பயணம் செய்த 4 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மெட்ரோ ரயிலில் கண்ணாடி உடைந்து விழுந்து பயணிகள் காயம் அடைந்த சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications