சென்னை கொளத்தூர் ஏரியாவில் ஆபரேஷனை ஆரம்பித்த ‘குறிஞ்சி’! 3 மாதம் தான்.. முழு வேகத்தில் மெட்ரோ பணிகள்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் Phase 2 வழித்தடம் 5-இல் கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி சுரங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜூன் 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் சேவையை சென்னையில் துவங்கியது. தற்போது சென்னையில், முதல் கட்ட மெட்ரோ திட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 3.1 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Phase II-க்கு தமிழ்நாடு அரசு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்று புதிய வளர்ச்சி வங்கி ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 5-ல் பயன்படுத்தப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயர்கள் பெயரிடப்பட்டுள்ளது. வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை (Upline) 246 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று 19.02.2025 தொடங்கியுள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஜூன் 2025-இல் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இந்தs சுரங்கம் தோண்டும் இயந்திரம் குறிஞ்சி ஸ்ரீனிவாச நகர் நோக்கி 1.06 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.
இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை, மார்ச் 2025 இறுதிக்குள் சென்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறthu. மேலும் வில்லிவாக்கம் இரயில் நிலையத்திலிருந்து வில்லிவாக்கம் பேருந்து முனையம் நோக்கி 603 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கும். மீதமுள்ள இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தள நிலைமைகளின் அடிப்படையில் சுரங்கம் அமைக்கும் பணியினை தொடங்கும்.
வழித்தடம் 5-இல் கொளத்தூர் முதல் நாதமுனி வரையிலான ஐந்து சுரங்கப்பாதை நிலையங்கள் உட்பட 3.9 கி.மீ நீளத்திற்கு இரட்டை சுரங்கப்பாதையுடன் 7.8 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் Tata Projects நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்ச்செல், Tata Projects நிறுவனத்தின் பொறியாளர் உஸ்மான் ஷெரீஃப் ஆகியோர் சுரங்கம் தோண்டும் பணியினை பார்வையிட்டனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications