இதுதான் அதிரடி.. மெட்ரோ பயணிகளுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்.. இனி எத்தனை பேர் வேணாலும் போகலாம்!
சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமான நல்ல செய்திமெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ காரணமாக சென்னையில் மக்கள் பயணம் செய்யும் முறை அடியோடு மாறி உள்ளது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தினமும் சென்னை மெட்ரோவில் 2.3 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள். 20 ஆயிரமாக இருந்தது தற்போது 2.5 லட்சமாக உயர்ந்து உள்ளது. ஆனாலும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை பெரிதாக உயர்த்தப்படவில்லை. இதனால் பகல் நேரங்களில் கூட மெட்ரோவில் கூட்டம் அலைமோதுகிறது.

முன்பெல்லாம் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் இருக்கும். பகல் நேரங்களில் மக்கள் அமர்ந்து செல்ல இருக்கை இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பகல் நேரங்களிலும் கூட மக்கள் அமர்ந்து செல்ல இருக்கை இல்லாத அளவிற்கு கூட்டம் உள்ளது. அதிலும் மாலை நேரங்களில் நிற்க கூட இடம் இருப்பது இல்லை.
இதனால் மக்கள் கடுமையாக அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சென்னையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அல்லது பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
அதிரடி அறிவிப்பு: சென்னை மெட்ரோவில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமான நல்ல செய்திமெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகளில், சென்னை மெட்ரோ ரயில் பகுதி I மற்றும் பகுதி I நீட்டிப்பு ரூட்டில் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.
தற்போது உள்ள 4 பெட்டிகள் ரயில்களில் கூட்டம் இருப்பதால் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களை வாங்க உள்ளனர். இதற்காக 26 ரயில்களை களமிறக்க உள்ளனர். 54 கிமீ தொலைவிற்கு இந்த ரயில்கள் இயக்கப்படும். அதிக எண்ணிக்கையில் அதிக ரயில்களை இயக்குவதற்கும், பீக் ஹவர்ஸில் நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த ரயில்களை வாங்க உள்ளனர். அதன் மொத்த செலவு கிட்டத்தட்ட ₹2,800 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இப்போது இருக்கும் வழித்தடம்: தற்போது சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.
அதிகம் பயன்படுத்துகிறார்கள்: சென்னையில் மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது.
வரப்போகும் மெட்ரோ வழித்தடம்: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.
இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் எல்லாம் முடிந்து ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயன்பாடு அதிகரிப்பு: சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. தினசரி பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் மட்டும் மெட்ரோவில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர். தினசரி பயணம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தை தாண்டி உள்ளது. ஒரு காலத்தில் தினசரி பயணம் செய்யும் நபர்கள் எண்ணிக்கை 10 ஆயிரம் என்று இருந்தது. தற்போது இதை 7 லட்சம் என்ற அளவிற்கு தினசரி உயர்த்தவும் தமிழ்நாடு அரசு,மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications