இன்று 9 நிமிடம் அல்ல! வெறும் 7 நிமிடங்கள்தான்! செம ஆஃபர்! மகிழ்ச்சியில் மெட்ரோ ரயில் பயணிகள்!
சென்னை: சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மெட்ரோ ரயில் நிறுவனம் 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே மின்சார ரயில்களுக்கு பதிலாக மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குவதாக அறிவித்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது ப்ளூ லைன் என அழைக்கப்படும் ஒரு வழித்தடத்தில் விம்கோ நகர் டெபோவிலிருந்து சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, கிண்டி, மீனம்பாக்கம், சென்னை சர்வதேச விமான நிலையம் வரை 9 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
மற்றொரு வழித்தடம் பச்சை லைன் என அழைக்கப்படுகிறது. இது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை இயக்கப்படுகிறது. பர்பிள் லைன் எனப்படும் மூன்றாவது வழித்தடம் மாதவரம் பால் பண்ணையிலிருந்து சிறுச்சேரி சிப்காட் வரை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
அது போல் ஆரஞ்ச் லைன் எனப்படும் 4ஆவது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை இயக்கப்படுவதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. அது போல் சிவப்பு லைன் எனப்படும் 5ஆவது வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையிலிருந்து சோளிங்கநல்லூர் வரை மெட்ரோ இயக்குவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
மெட்ரோ ரயில்கள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. இதனால் மெட்ரோ நிறுவனமும் பயணிகள் வசதிக்காக பல அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதாவது இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகளுக்காக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இன்னலை துடைக்க வருகிறது மாநகர பேருந்து. மேற்கண்ட வழித்தடத்தில் 150 பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ ரயிலும் மக்களுக்கு கை கொடுக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் இன்றைய தினம் மெட்ரோவில் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும். பொதுவாக நீலம் மற்றும் பச்சை லைன்களில் பகல் 12 மணி முதல் 8 மணி வரை அதிக ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 7 நிமிட இடைவெளியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என காலை 5 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை என இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் இந்த ரயில் நேரங்களுக்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications