சென்னை மெட்ரோ vs ரயில்வே.. வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் பணி குறித்து நெட்டிசன்கள் விமர்சனம்
சென்னை: சிஎம்ஆர்எல் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தையும், தெற்கு ரயில்வேயையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 17 வருடங்களாகியும் வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணியை முடிக்காதததால், விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேநேரம் சென்னை மெட்ரோ அதே பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளை மிக வேகமாக செய்து வருவதால் பாராட்டப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினமும் 2 லட்சம் பேர் பயணித்து வருகிறார்கள். இந்த ரயில் உண்மையில் பரங்கிமலை வரை இயக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி பரங்கிமலை வரை இணைத்திருந்தால் பல லட்சம் சென்னை மக்கள் இன்று குறைந்த செலவில் போக்குவரத்து வசதிகளை பெற்றிருப்பார்கள்.

ரயில்களில் தாம்பரம் மக்கள் எளிதாக வேளச்சேரிக்கும், அதனை சுற்றியுள்ள ஐடி நிறுவனங்களுக்கும் சென்றிருப்பார்கள். ஆனால் 17 வருடங்கள் ஆகியும் பணிகள் முடியவில்லை. உண்மையில் சென்னை வேளச்சேரி பரங்கிமலை இடையே 5 கிமீ தூரத்திற்கு பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி 2008ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடியில் பணிகளை முடிக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் பணிகள் தாமதமானதால், செலவு ரூ.734 கோடியாக மாறியது. ஆனால் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், பல ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டிற்குப் பின் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக, பிரமாண்ட தூண்களும் அமைக்கப்பட்டன. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில், தூண்கள் இடையே பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதில் 157 மற்றும் 158வது தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த மேம்பாலத்தின் பாரம் தாங்காமல், ஒரு பகுதி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கீழே விழுந்து, 3 அடி ஆழத்திற்கு சாலையில் புதைந்தது. இதனிடையே சென்னை ஐ.ஐ.டி., குழுவினர், இந்த மேம்பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் இதர தூண்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் பல்வேறு பரிந்துரைகளை அளித்தனர். இதையடுத்து சில மாதங்களுக்குப் பின், பணிகள் மீண்டும் தொடங்கியது. ஆனால் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் உறுதியாக தொடங்குமா என்பது தெரியவில்லை..

இந்நிலையில் அதே பகுதியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சோழிங்கநல்லூர் வரை பாதையில் மெட்ரோ ரயில் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்த பணிகள் முடிந்து வரும் 2027ம் ஆண்டு வாக்கில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போதும் கூட பறக்கும் ரயில் பாதை பணிகள் முடியுமா என்று தெரியவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
பரங்கிமலை வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதை பணிகள் 25 வருடத்தை கடந்து வெள்ளிவிழாவை கண்டாலும் ஆச்சர்யமில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள். அதேநேரம் நெட்டிசன் ஒருவர் கூறும் போது, சென்னை மெட்ரோ ரயில் என்பது அதிக கட்டணம் கொடுத்து பயணிப்பவர்களுக்கானது.. எனவே அதற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்றும், ஆனால் குறைந்த கட்டணத்தில் ஏழைகள் அதிகம் பயணிக்கும் பறக்கும் ரயில் திட்டத்திற்கு குறைந்த முக்கியத்துவமே கிடைக்கும் என்றும், அதுதான் தாமதத்திற்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளார். இதனிடையே வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில்களின் சேவையும் குறைந்துவிட்டதாகவும், பீக் அவர்ஸ்களில் கடுமையான கூட்டம் அலைமோதுவதாகவும் வேளச்சேரி பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

-
நடுவழியில் நாகர்கோவில் வந்தே பாரத்.. மதுவில் மயங்கிய நாங்குநேரி கேட் கீப்பர்கள்.. கடைசியில் ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications