வந்தாச்சு விடிவுகாலம்! சென்னையில் இனி கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்சினை வராது! இது மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் குடிநீர் சப்ளை என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வரும் நிலையில், இதற்கான அட்டகாசமான தீர்பைத் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

சென்னையில் தண்ணீர் சப்ளை என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்னுமே கூட பல பகுதிகளுக்கு முறையான நீர் சப்ளை இருப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

 Chennai Metrowater to link all water sources with circular pipeline for equal distribution

குறிப்பாகக் கோடைக் காலங்களில் இது மிகப் பெரிய பிரச்சினையாக மாறும் நிலையில், இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் இப்போது புது திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது,

புது பிளான்:
இதற்கிடையே சென்னையில் அனைத்து பகுதிகளுக்கும் சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்யச் சென்னை மெட்ரோவாட்டர் நிர்வாகம் அதன் அனைத்து நீர் ஆதாரங்களையும் வட்ட குழாய் மூலம் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. அனைத்து நீர் ஆதாரங்களை இணைக்கும் இந்த சர்க்குலர் பைப்லைன் திட்டத்தை ₹2,005 கோடி செலவில் அமைக்க மெட்ரோவாட்டர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

1 மீ முதல் 1.8 மீ விட்டம் கொண்ட பெரிய பைப்லைன் மூலம் நீர் ஆதாரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளனர். சென்னை கார்ப்பரேஷனின் 426 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய இந்த பாதை,, சுமார் 94.45 கிமீ நீளத்திற்குச் செல்லும் என்று தெரிகிறது. நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல் நீரைக் குடிநீராக்கும் மையம் உட்பட ஆறு முக்கிய நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு இந்த ரிங் மெயினில் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சர்க்குலர் பைப்லைன்: இந்த சர்க்குலர் பைப்லைன் 11 விநியோக மையங்களுக்குத் தண்ணீரை அனுப்பும், அங்கு இருந்து தற்போதுள்ள மற்ற டிரான்ஸ்மிஷன் மெயின் லைன்கள் வழியாகப் பொதுமக்களுக்கு நீர் அனுப்புவதே திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் மட்டும் செயற்படுத்தப்பட்டால் நகரில் இருக்கும் நீர் பிரச்சினை என்பது பெரியளவில் குறையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து மெட்ரோவாட்டர் அதிகாரிகள் கூறுகையில், "தற்போது ​​ஒவ்வொரு நீர் ஆதாரத்தில் இருந்தும் அருகே உள்ள பகுதிகளுக்கு மட்டுமே நீர் சப்ளை இருக்கிறது. உதாரணமாக, மீஞ்சூரில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையில் இருந்து வட சென்னையில் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டது, அங்கு நீர் விநியோகம் குறைந்தால், மாற்ற வழிகளை ஏற்பாடு செய்வது சிக்கலாக இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு சர்க்குலர் பைப்லைன் திட்டம் தீர்வாக அமையும்" என்கிறார்கள்.

என்ன வசதி: ரிங் மெயின் அமைப்பு அமைக்கப்பட்டால் நகரில் எந்த இடத்தில் இருந்தும் எங்கு வேண்டுமானாலும் நீரை எடுத்துச் செல்ல முடியும். போதுமான அழுத்தம் இருந்தால் நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தோ அல்லது அல்லது வீராணம் ஏரியில் இருந்தோ திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலங்களுக்கு நீர் சப்ளை செய்ய முடியும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது..

தொடர்ந்து வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன் அடுத்த 30 மாதங்களில் இத்திட்டத்தை முழுமையாக முடிக்க மெட்ரோவாட்டர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து நீர் ஆதாரங்களில் இருந்தும் இந்த ரிங் ரிங் மெயின் அமைப்புக்கு நீர் செல்லும் என்பதால் எப்போதும் வேண்டுமானாலும் எந்த இடத்தில் இருந்தும் தண்ணீரை எடுக்க முடியும். வால்வுகள் கொண்ட இந்த முழு அமைப்பும் ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க கண்டோர்ல சென்டர் ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கூட நீர் விநியோகத்தைச் சமப்படுத்த உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+