ஸ்டாப்ல பஸ்ஸ நிறுத்தலையா? அப்போ உடனே இதை பண்ணுங்க.. சென்னைவாசிகளுக்கு எம்டிசியின் ஜில்ஜில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பொதுப் போக்குவரத்துக்காக சென்னைவாசிகள் அதிகமானோர் மாநகர போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்துவதில்லை என பயணிகள் குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் அதற்கான தீர்வை காணும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்டிசி.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தின நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் : மெட்ரோ ரயில் சேவையும் மின்சார ரயில் சேவையும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தான். அந்த வகையில் அரசு பேருந்துகள் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. நாளொன்றுக்கு 2500 பேருந்துகள் சென்னை நகரில் சாலைகளில் பயணிக்கின்றன. இவற்றில் சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிப்பதாக கூறப்படுகிறது.
கடும் அவதி: அதே நேரத்தில் முக்கியமான நேரங்களில் பேருந்துகளை இயக்குவதில்லை நெரிசல் காரணமாக உரிய நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும் புகார் கூறப்படுகிறது. குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பேருந்துகளை உரிய நிறுத்தங்களில் நிறுத்தப்படாமல் செல்வதால் மக்கள் கடும் அவதியை சந்திப்பதாக புகார்கள் எழுந்தன.

முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில் சென்னை நகரில் வசிக்கும் அரசு பேருந்து சேவையை பயன்படுத்தும் மக்களின் குறையை தீர்க்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது சென்னை மாநகர போக்குவரத்து கழகமான எம்டிசி. அதன்படி சென்னை மாநகரில் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணை இடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்லும்போது புகார் அளிக்கலாம் எனவும் இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புகார் அளிக்க எண்: அந்த வகையில் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நிற்காமல் செல்லும்போது பொதுமக்கள் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பேருந்து இயக்கப்படும் நேரம் மற்றும் பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. கார்டு விண்ணப்பித்தோருக்கு 30 நாளில் தமிழக அரசு குட் நியூஸ் -
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications