சென்னையில் தினமும் பேருந்தில்.. பயணம் செய்கிறீர்களா? மொத்தமாக எல்லாம் மாறுது.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் உள்ள சீரமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் தவிர மற்ற பல பேருந்து நிலையங்கள் பழுதடைந்த தளங்கள், சுகாதாரமற்ற கழிப்பறைகள், போதிய வெளிச்சமின்மை, சிசிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலை என அரசு அலட்சியத்தின் பிம்பமாக காட்சி அளிக்கின்றன. புதிதாக சீரமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கூட போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) தற்போது பெருநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையங்களை இயக்கி, பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கவுள்ளது. இதன்மூலம், பேருந்து நிலையங்களின் தரத்தை மேம்படுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையங்கள்
திரு.வி.க. நகர், பெரியார் நகர், அம்பத்தூர், முல்லை நகர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட இடங்களில் சி.எம்.டி.ஏ. புதிய பேருந்து நிலையங்களை அமைத்துள்ளது. திரு.வி.க. நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் பேருந்து நிலையங்களை இயக்கி, பராமரிக்கும் சலுகைதாரர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை சி.எம்.டி.ஏ. கோரியுள்ளது.
அதேபோல், முல்லை நகர் மற்றும் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகளையும் வெளியிட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூன்று ஆண்டு சலுகை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கக்கூடும்.
மாநகரின் நெரிசலைக் குறைப்பதும், வட்டார அளவிலான பேருந்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் சி.எம்.டி.ஏ-வின் வியூகத்தின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லை நகரில் 0.76 ஏக்கர் பரப்பளவில், ₹7.25 கோடியில் மகா கவி பாரதி நகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்களில் தரமான வசதிகள்
சுமார் 33,120 சதுர அடி கட்டப்பட்ட பரப்பளவைக் கொண்ட இந்த நிலையம் நான்கு பேருந்துகளை நிறுத்த இடமளிக்கும். இங்கு இரண்டு சில்லறை கடைகள், உணவுக்கூடம், ஏ.டி.எம்., பாலூட்டும் அறை, கழிப்பறைகள், மாதாந்திர பயணச்சீட்டு மையம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் போன்ற வசதிகள் உள்ளன. விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த நிலையத்தின் தினசரி செயல்பாடுகளுக்கும், பராமரிப்புக்கும் ஒரு தொழில்முறை முகமை தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கவியரசு கண்ணதாசன் நகரில் 1.31 ஏக்கர் பரப்பளவில், ₹13.4 கோடியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் சுமார் 57,050 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு ஐந்து கடைகள், பயணச்சீட்டு மையங்கள், கழிப்பறைகள் மற்றும் பயணிகளுக்கான பிற வசதிகள் உள்ளன. அரசு-தனியார் பங்களிப்பு (பி.பி.பி.) மாதிரி ஒப்பந்தத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைதாரர் பராமரிப்புப் பணிகள், காலமுறை இயந்திர பராமரிப்பு, தூய்மை, பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவார். பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிட கட்டணம், கடைகளுக்கான குத்தகை மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டலாம். இருப்பினும், நடைமேடை அல்லது பார்வையாளர் கட்டணம் அனுமதிக்கப்படாது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ தரப்பு கூறுகையில், "பொது போக்குவரத்து வசதிகளில் தொழில்முறை மேலாண்மை நடைமுறைகளைக் கொண்டு வருவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதி இது. போக்குவரத்துத் துறையிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெற்றுள்ளோம. பராமரிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் இது சீராக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications