தமிழகத்தை மிரட்டும் டெங்கு!சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல்
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த டெங்கு காய்ச்சல் அதிகமான அளவில் பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சல் அதிக காய்ச்சலையும் அதிக தலைவலியையும் தொண்டை வலியையும் வாந்தியையும் ஏற்படுத்தும். அத்துடன் சிறுநீர், வாந்தி, மலத்தில் ரத்தம் வந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.
டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படுகிறது. இது காலையில் மட்டுமே கடிக்கும். இந்த கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த நோயின் தாக்கம் அதிகமானால் உயிரிழப்பை கூட ஏற்படுத்தும். எனவே அதீத காய்ச்சல், தொடர்ந்து 4 அல்லது 5 நாட்களுக்கு விட்டுவிட்டு காய்ச்சல் வந்தாலோ அல்லது உடலில் ஏதேனும் படை போல் இருந்தாலோ உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
அந்த வகையில் தற்போது சென்னா மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ரத்தப் பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக சொல்கிறார்கள். விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் என தெரிகிறது.
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கால்நடை மருத்துவராவார். இவர் கும்பகோணம் தீவிபத்து, சுனாமி, மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின் போது பாதிப்புகளை கட்டுக்குள் வைக்கும் அளவுக்கு செயல்படுவார். இவர் சுகாதாரத் துறை செயலாளராக இருந்த போது உலகையே ஆட்டி படைத்த கொரோனா தமிழகத்தை விட்டுவைக்கவில்லை.
தமிழகத்தில் முதல் அலை, இரண்டாவது அலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளும் குறைந்த உயிரிழப்புகளும் ஏற்பட ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் மிகவும் முக்கியத்துவம். வெளிமாநிலங்களில் கொரோனாவுக்கு நிறைய பேர் பலியான நிலையில் தமிழகத்திலோ விமான நிலையம், ரயில் நிலையம், பஸ்நிலையம் என ஒவ்வொரு இடங்களிலும் ராதாகிருஷ்ணன் சோதனை நடத்தி கொரோனா மேலும் பரவாமல் பார்த்துக் கொண்டார்.
அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கூட கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டார். தற்போது டெங்கு காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications