7 மணிநேரம் போதும்! பெங்களூர் வழியாக சென்னை-மைசூர் புல்லட் ரயில் திட்டத்தின் சிறப்பே இதுதான்! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் வழியாக சென்னை-மைசூர் இடையே 435 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான ஜிபிஎஸ் ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் தான் புல்லட் ரயிலின் வேகம், திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ரயில் நின்று செல்லும் இடங்கள் மற்றும் ரயிலில் இருக்கும் தொழில்நுட்பம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. ரயில்வே துறையை நவீனப்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்ததாக புல்லட் ரயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

Chennai – Mysore Bullet Train may cover 435 km just 7 hours only and specification details here

புல்லட் ரயில் என்பது மத்திய பாஜக அரசின் கனவு திட்டமாகும். இந்த புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் அதிகளவில் நிதி ஆதாரம் தேவையாக உள்ளது. இதனால் இந்த திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

இதனால் முதற்கட்டமாக முதற்கட்டமாக மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக டெல்லி - வாரணாசி, டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை - ஹைதராபாத், சென்னை - மைசூர், டெல்லி - அமிர்தசரஸ் வாரணாசி - ஹவுரா ஆகிய 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை -மைசூர் புல்லட் ரயில் திட்டம் பெங்களூர் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வு பணி தொடங்க உள்ளது. அதாவது ஜிபிஎஸ் உதவியுடன் ஆய்வு பணிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை 435 கிலோமீட்டர் தொலைவுக்கு ஜிபிஎஸ் ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வு என்பது புல்லட் ரயில் இயக்க எந்த இடங்கள் வழியாக பாதை அமைக்கலாம் என்பதை அடிப்படையாக கொண்டது. இந்த ஆய்வை தொடர்ந்து புல்லட் ரயில் பாதை மார்க்கங்கள் இறுதி செய்யப்படும்.

இந்த பணிகளை தேசிய ஹைஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வுக்கு பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு புல்லட் ரயில் திட்டம் சென்னை-மைசூர் மார்க்கத்தில் தொடங்கப்படும். இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பெங்களூர் வழியாக சென்னையில் இருந்து மைசூர் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட்டால் எந்த வகையான மாற்றங்கள் நடக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியாவில் தற்போது உள்ள அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றனர். வந்தே பாரத் ரயில்கள் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. ஆனால் புல்லட் ரயில் என்பது அதிகபட்சமாக 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதனால் பயண நேரம் என்பது பாதியளவாக குறைய வாய்ப்புள்ளது.

தற்போது சென்னை-மைசூர் இடையே 435 கிலோமீட்டர் தொலைவை 10 முதல் 11 மணிநேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வரும்போது இதன் அளவு என்பது வெறும் 7 மணிநேரமாக குறையும். இதன்மூலம் பயணிகளுக்கு நேரம் மிச்சமாகும். அதோடு சென்னை-பெங்களூர்-மைசூர் இடையேயான தொழில்களும் வளர்ச்சிக்கும் இந்த புல்லட் ரயில் உதவிகரமாக இருக்கும். இருப்பினும் டிக்கெட் கட்டணம் என்பது சற்று அதிகமாக இருக்கலாம்.

இந்த ரயில் சேவை செயல்பாட்டு வரும்போது சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூர், சென்னப்பட்டணா, மண்டியா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்ல வாய்ப்புள்ளது. மேலும் புல்லட் ரயிலின் இன்னொரு சிறப்பம்சம் என்பது நிலஅதிர்வுகளை முன்கூட்டியே கண்டறிவது தான். இதற்காக புல்லட் ரயிலில் சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி புல்லட் ரயில் பாதையில் ரயில் பயணிக்கும்போது தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகளில் சிறு மாற்றங்கள் இருப்பினும் அதுபற்றி உடனடியாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் வகையில் அலாரம் ஒலிக்கும். அதோடு அவசரகால தானியங்கி பிரேக் மூலம் ரயிலும் நிறுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+