சரவணபவன் இருந்த 300 கோடி நிலம்.. சென்னையில் வரும் பிரம்மாண்ட மெட்ரோ பார்க்கிங் வசதி
சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்த தீர்ப்பு வந்தது.இதையடுத்து கடந்த அக்டோபர் 28ம் காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், அதை அகற்றினார்கள். அங்கு சுமார் 40,000 அடியில் நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான பார்க்கிங் வரப்போகிறது.
சென்னையில் ஆலந்தூர் பரங்கிமலை மீனம்பாக்கம் வரை உள்ள பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு உகந்த நிலங்களோ பெரிய அளவிலான அரசுக்கு சொந்தமான நிலங்களோ இல்லை. அப்படி உள்ள ஒரு சில மிகப்பெரிய நிலங்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்த நிலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பின்பும் அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தன. அந்த நிலங்களில் மதிப்பு பல கொடியை தாண்டும். ஒவ்வொரு அரசு நிலங்களைப் பற்றியும் சில சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். அதே நேரம் அரசும் இந்த பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்க நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க தொடங்கியது.

குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பகுதியில் பல்வேறு நிலங்கள் அதிரடியாக மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்டார்கள். குறிப்பாக பரங்கிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாக பல்லாவரம் கண்டோன்மென்ட் பகுதிகளில், இது போன்ற நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன சுமார் 15 ஏக்கர் மதிப்பிலான அரசு நிலம் கடந்த காலங்களில் மீட்கப்பட்டன. இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி காலையிலேயே சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சுமார் 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சரவணபவன் ஹோட்டல் இந்த காலமாக இயங்கி வந்தது. அதனை அதிகாரிகள் மீட்டெடுத்தார்கள். சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நிலத்தை அரசு கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வந்த காரணத்தால் மீட்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை நகர மீட்கப்பட்ட ஆலந்தூர் நிலம் சுமார் 15 ஏக்கர் ஆகும். சும்மா 40,000 சதுர அடி பரப்பளவு உள்ள அந்த நிலம் , நங்கநல்லூர் ஓடி மெட்ரோ ரயில் நிலையத்திற்காக 500 கார்கள் நிறுத்தும் பார்க்கிங் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.. தற்போது அந்த நிலத்தை வருவாய்த்துறை சென்னை மற்றும் ஒப்படைத்திருப்பதாக வெளியாகி உள்ளது. நங்கநல்லூர் ஓடி மெட்ரோ ரயில் நிலையம் என்பது சென்னை ஆலந்தூரில் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பார்க்கிங் வசதி என்பது இதுவரையில் இல்லை. இந்த பார்க்கிங் வசதியின் காரணமாக அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications