நீலாங்கரையில் சட்டென தோன்றிய "உருவம்".. சென்னைக்கு வந்த "விருந்தாளி": பீச்சில் திகைத்து பார்த்த ஜனம்
சென்னை: சென்னை நீலாங்கரை பீச் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பூரித்துப்போய்விட்டனர். என்ன காரணம்?
சென்னையை சுற்றி நிறைய கடற்கரைகள் உள்ளன... இதில், மெரினா, பெஸ்ஸி போன்ற பீச்கள் மிகவும் பிரபலமான கடற்கரைகளாக விளங்கி கொண்டிருக்கின்றன..,,சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் திரள்வது இந்த கடற்கரைகளாகவே உள்ளன..

கடல் பகுதிகள்: இந்த கடல் பகுதிகள், மாசுபடுவதாக அடிக்கடி புகார்களும் எழுந்துவருகின்றன. அதனால்தான், இந்த கடல் பகுதிகளை பாதுகாக்கவும், இங்குள்ள மீன் வளத்தை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
அதேபோல, இதே சென்னையிலிருக்கும் வேறு சில பீச்களில் பொதுமக்கள் நடமாட்டம் அவ்வளவாக இருப்பதில்லை.. அப்படிப்பட்ட பீச்கள்தான், நீலாங்கரை, எங்கம்பாக்கம் போன்றவை..
நீலாங்கரை: இதில், நீலாங்கரை பீச்சில் டால்பின்கள் அடிக்கடி தோன்றுவது வழக்கமான ஒன்று.. முன்பெல்லாம் சென்னையில் டால்பின்களை பார்ப்பது அரிதாகவே இருக்கும்.. காரணம், டால்பின்கள் மிகவும் சுத்தமான கடல் நீரை மட்டுமே விரும்பக்கூடியவை..
இப்போது நீலாங்கரை கடற்கரையில் சில டால்பின்கள் வெளிவந்துள்ளன.. அதேபோல, காலை கடல் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான டால்பின்களை அந்த பகுதி மக்கள் பார்த்ததாக சொல்கிறார்கள். அதேபோல இந்த டால்பின்களை படகில் சென்ற மீனவர்கள் பார்த்து, அதை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்..
டால்பின்கள்: கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து கொஞ்சி விளையாடிய டால்பின்களை இணையவாசிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.. திரும்ப திரும்ப இந்த அற்புதத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றுவதாக இணையவாசிகள் டால்பின் வீடியோக்களுக்கு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்..
மேலும் சிலரோ, கடல்தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும்போது, இப்படி டால்பின்கள் தோன்றுவது ஆச்சரியமாக இருப்பதாக தங்கள் வியப்பை பதிவிட்டு வருகிறார்கள்.
நீலாங்கரை பீச்சுக்கு டால்பின்கள் வந்திருக்கும் செய்தியை கேட்டதுமே, பொதுமக்கள் பலர் அதை காண்பதற்காக பீச்சுக்கு வருகை தருகிறார்கள்.. கடல் அலைகளுக்கு நடுவே துள்ளி எழும் டால்பின்களை கண்டு மகிழ்வதுடன், அதை வீடியோவாகவும் எடுத்து கொள்கிறார்கள்..
ஈஞ்சம்பாக்கம்: கடந்த 2021ல்கூட, ஈஞ்சம்பாக்கம் பீச்சுக்கு பக்கத்தில், டால்பின்கள் கூட்டமாக தென்பட்டன.. அப்போதும் இதுபோலவே மீனவர்கள் திகைத்து போய்விட்டார்கள்.. சில மாதங்களுக்கு முன்புகூட, நீலாங்கரை பீச்சில் ஒருசில டால்பின்கள் தென்பட்டதாம்.
வழக்கமாக, ஆழ்கடலில் மட்டுமே காட்சியளிக்கும் டால்பின்கள், கடற்கரை ஓரத்தில் 20க்கும் மேற்பட்ட கூட்டமாக திரண்டு, அழகாக வரிசைகட்டி துள்ளிக் குதித்து விளையாடியிருக்கின்றன. மேலும், ஒன்றன் பின் ஒன்றாக, ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக டால்பின்கள் இரை தேடி சென்றுள்ளன.. கரை பகுதியில் டால்பின்களை பார்த்தது இதுவே முதல்முறை என்று மீனவர்கள் பலரே பூரித்து சொல்கிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications