வகுப்பறையிலேயே தற்கொலை செய்த ஆசிரியர், சென்னை நீலாங்கரையில் மாணவர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே தூக்கில் தொங்கியதால், மாணவ- மாணவிகள் கதறி அழுதனர்.
சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர்.

அங்கு 8ம் வகுப்பு அறையில் ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். வகுப்பறையில் ரத்தம் சிதறி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் கதறி அழுதனர். மாணவர்களின் சத்தம் கேட்டு அங்கு வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், தூக்கில் பிணமாக தொங்கிய அந்தோணி ஜெனிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஆசிரியர் அந்தோணி ஜெனிபர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருமணம் ஆகாத இவர், பள்ளியிலேயே தங்கி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், 8-ம் வகுப்பு, 9- ம் வகுப்புக்கு பாடம் நடத்தியதும், 8ம் வகுப்பு வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வேறு பள்ளியில் இன்று தேர்வை எழுதினர். ஆசிரியர் அந்தோணி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications