நெல்லை வந்தே பாரத் ரயிலில் போறீங்களா? நேற்று முதல் வந்த மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவு பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனிடையே, நேற்று முதல் வந்தே பாரத் ரயில் செல்லும் நேரத்தில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. வந்தே பாரத் ரயிலில் விமானத்திற்கு நிகரான வசதிகள் இருப்பதால் இந்த ரயிலில் பயணம் செய்ய பலரும் விரும்புகின்றன. அதிவேகம், சரியான டைமிங்கிற்கு இலக்கை எட்டுவது, சொகுசான இருக்கைகள், முழுவதும் ஏசி, வஃபை வசதி என வந்தே பாரத்தில் உள்ள வசதிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

chennai-nellai-vande-bharat-train-arrival-time-change-at-madurai-southern-railway-announced

இதனால் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை - கோவை, சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் மற்றும் செனையில் இருந்து நெல்லைக்கு என மூன்று வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயிலை இயக்குவது குறித்து ரயில்வே பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

முன்னதாகவே சென்றடையும்: சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடம் என்பதால் இந்த ரூட்டில் பயணிகள் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும் . அந்த வகையில், நெல்லை வந்தே பாரத் ரயிலிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் தான், சென்னையில் இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கு சில முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ரெயில் நிலையங்களுக்கு முன்கூட்டியே சென்றடையும்.

நேற்று முதல் அமல்: அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்படும். இந்த ரெயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இரவு 7.46 மணிக்கு வருகை தந்து 7.48 மணிக்கு புறப்படும், மதுரை ரயில் நிலையத்திற்கு 8.30 மணிக்கு வருகை தந்து 8.35 மணிக்கு புறப்படும். விருதுநகருக்கு 9.03 மணிக்கு வருகை தந்து 9.05 மணிக்கு புறப்படும்.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயில் இயக்க நேரத்தில் இருந்து தற்போது 10 நிமிடம் முன்னதாக சென்றடையும். இதேபோல, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, நெல்லை ரயில் நிலையங்களுக்கு ஏற்கனவே உள்ள வழக்கமான நேரத்தில் ரயில் சென்றடையும். இதில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய கால அட்டவணை டிசம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+