சென்னை டூ நெல்லை வந்தே பாரத்தில் பிரேக் பழுது.. நடுவழியில் நின்ற ரயில்! பரிதவித்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோயில் சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் அருகே ரயில் வந்த போது பிரேக் பிடித்துக்கொண்டு விடுபடாமல் இருந்தது. இதனால், ரயில் நிறுத்தப்பட்டு கோளாறு சீர் செய்த பிறகே புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேக வசதி, சொகுசு இருக்கைகள் உள்ளிட்டவை காரணமாக வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல வழித்தடங்களில் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து வருகிறது இந்தியன் ரயில்வே.

வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தை எடுத்துக்கொண்டால், சென்னை - எழும்பூர், சென்னை - கோவை, சென்னை - நாகர்கோவில், சென்னை - பெங்களூர் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை தற்போது இருக்கை வசதிகள் கொண்ட ரயிலாக தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பயணிகளின் வசதிக்கேற்ப தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை செய்து வரும் நிலையில் சில நேரங்களில் பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயிலில் பிரேக் பழுதாகியிருந்தது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பிரேக் பழுது
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே நெல்லை வழியாக வண்டி எண் 20627/20628 எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது புதன்கிழமையை தவிர்த்த மற்ற நாட்களில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்றும் இந்த ரயில் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் நெல்லை ஜங்சனுக்கு மதியம் 12.32 மணிக்கு வந்தடைந்தது. 12.40 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட நிலையில் சிறிது தூரத்தில் நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரயில் சென்றபோது திடீரென்று பிரேக்கில் பழுது உண்டானது. இதனால் ரயில் அப்படியே நிறுத்தப்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
40 நிமிடங்கள் தாமதம்
அதன்பேரில் ஊழியர்கள் வந்து ரயிலில் ஆய்வு செய்தனர். அப்போது 17 - சி என்ற பெட்டியில் பிரேக் பிடித்துக் கொண்டு விடுபடாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் இந்த பழுதினை தற்காலிகமாக சரி செய்தனர். இதனா 40 நிமிடங்கள் தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பி சென்றது. ரயில் திடீரென நடு வழியில் நின்றதால் பயணிகள் ஏன் நிற்கிறது எதற்கு என தெரியாமல் திகைத்தனர்.
பின்னர் தான் இது பற்றி தெரியவந்தது. தொடர்ந்து 40 நிமிடங்களாக ரயில் அதே இடத்தில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். மீண்டும் பிரேக்கில் பழுது ஏற்படாமல் இருப்பதற்காக ரயில்வே ஊழியர்களும் ரயிலில் சென்றனர். இதனால் மீண்டும் சென்னைக்கு புறப்படும் ரயிலும் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications