கொரோனாவுடன் பிறந்த ஆண் குழந்தை.. ஸ்டீராய்டு, வென்டிலேட்டர் மூலம் போராடி உயிர் பிழைத்த நெகிழ்ச்சி
சென்னை: சென்னையில் பிறந்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுப்பிரச்சனையால் பாதித்து கொரோனா உறுதி செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை அந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியது.
கொரோனா எனும் மோசமான அரக்கன் பெரியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் என பாரபட்சம் பார்க்காமல் அஜாக்கிரதையாக இருப்பவர்களை தாக்குகிறது.
இது அறிகுறியுடன் தாக்கும் கொரோனா, அறிகுறி இல்லாமல் தாக்கும் கொரோனா என இரு வகைகளாக உள்ளன. அறிகுறி இல்லாத கொரோனா மிகவும் மோசமான உயிர் கொல்லியாகும்.

நிபுணர்கள்
கொரோனா தொற்றுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவித்த ஒரு அறிகுறியும் ஏற்படாமல் சைலன்ட்டாக வந்து வைலன்ட்டாக நடந்து கொள்கிறது. பெரும்பாலானோருக்கு உயிரிழப்பு ஏற்பட காரணமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் வேலப்பன்சாவடியில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

2 மணி நேரம்
இந்த குழந்தை பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா சோதனை நடத்தியதில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையின் தாய்க்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் நோய் தொற்று உறுதியானது.

கொரோனா தொற்று
அவருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை. அவரது தொப்புள் கொடி மூலமாக வயிற்றில் உள்ள குழந்தைக்கும் கொரோனா பரவியது. அந்த குழந்தைக்கு நுரையீரலில் 80 முதல் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.

5 நாட்கள் செயற்கை சுவாசம்
பிறந்த 2 மணி நேரத்திற்கெல்லாம் அந்த குழந்தைக்கு மூச்சு பிரச்சினையை சரி செய்ய ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. சுமார் 5 நாட்கள் குழந்தை வெண்டிலேட்டரில் இருந்தது. சாதாரண அறையில் குழந்தை வைக்கப்பட்டு வாய்வழியாகவே உணவுகள் கொடுக்கப்பட்டன.

ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள்
இதையடுத்து தொடர்ந்து ஸ்டீராய்டுகள், ரத்தம் உறையாத்தன்மை கொண்ட மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அந்த குழந்தைக்கு நோய் தொற்று சரியானது. பின்னர் அந்த குழந்தை 11 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட இந்த குழந்தை மறுபிறவி எடுத்ததாகவே தெரிகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications