சென்னையில் ஒரே ஒரு சின்ன ஐடியா.. 3 கோடி சம்பாதித்த நிஷா.. வீடுகளை வாடகைக்கு விடுவோர் உஷார்
சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த நிகம்பத் நிஷா என்பவர் நீலாங்கரை பகுதியில் கமிஷன் அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு பிடித்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் வீட்டை வாடகைக்கு எடுப்பாராம்.பின்னர் அதனை ஓனர்களுக்கே தெரியாமல் அந்தவீட்டை குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டாராம். இப்படி 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளாராம். 46 பேர் இதுவரை ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் போலீசார் நிகம்பத் நிஷாவை கைது செய்துள்ளனர்.
சென்னையில் வாடகைக்கு வீடு விடுவோரை குறிவைத்து சிலர் நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள். சென்னையில் பலர் வீடுகளை வாங்கி போட்டுள்ளார்கள். அப்படி வாங்கி போட்ட வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியூர்களில் இருப்பதால் அதனை செய்ய முடிவது இல்லை.. அப்படிப்பட்டவர்களிடம் வாடகை ஒப்பந்தம் போட்டு, வீடுகளை வாடகைக்கு எடுத்து அதனை லீசுக்கு விட்டு மோசடி செய்வது நடக்கிறது.

வாடகைக்கு வீடு
வீட்டின் உரிமையாளருக்கு பதில் வாடகைக்கு குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் போல் மாறி, அந்த வீட்டை ஒத்திக்கு விடுகிறார். இப்படி ஒத்திக்கு விட்டு லட்சங்களை மோசடி செய்யும் கும்பல், கடைசியில் வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்போருக்கும் இடையே தீராத தலைவலியை உருவாக்குகிறார்கள். அதேபோல் சிலர் வீட்டின் உரிமையாளர்களிடம் சில தனியார் நிறுவனம் ஒப்பந்தம் போடுகின்றன.
மாதம் மாதம் வாடகை
மாதம் மாதம் வாடகை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுகிறார்கள். அவர்களால் வீட்டினை ஏமாந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே வீட்டை வாடகைக்கு விடும் போது, கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் சென்னையில் வீடு வாடகைக்கு போகும் போதும், இவர் தானா உண்மையில் வீட்டின் உரிமையாளர் என்பதை அறிய வேண்டும்.
மின்சாரம் நிச்சயம் உரிமையாளர் பெயரில் தான் இருக்கும். எனவே வீட்டின் உரிமையாளரை இபி நம்பரை வைத்து அடையாளம் காணலாம். அதேபோல் வீட்டில் உள்ள சிக்கல்களை அறிய பக்கத்து வீடுகளில் நன்கு விசாரியுங்கள். மேலும் வீட்டின் உரிமையாளர் பணத்தை திரும்ப தருவாரா அல்லது ஏமாற்றும் நோக்கில் செயல்படுவாரா என்பதையும் அறியுங்கள். சென்னையில் வீடு மோசடி என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. சென்னை நீலாங்கரை பகுதியில் நடந்த மோசடி குறித்து பார்ப்போம்.
சென்னை நீலாங்கரை
சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் நிகம்பத் நிஷா என்பவர் அதே நீலாங்கரை பகுதியில் கமிஷன் அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு பிடித்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நிஷா மீது நீலாங்கரையை சேர்ந்த தர்மன் என்பவர் உள்பட 46 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
3 கோடி மோசடி
நிகம்பத் நிஷா, தான் நடத்தி வரும் நிறுவனம் மூலம் வீடுகளை வாடகைக்கு எடுத்து பின்னர் அந்த வீடுகளை சொந்த வீடுகளை போன்று குத்தகைக்கு விட்டு மோசடியில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதன் மூலம் புகார் கொடுத்துள்ள 46 பேரிடம் ரூ.3 கோடி வரை சுருட்டி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நிஷா கைது
நிஷா மீதான இந்த புகார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் காயத்ரி, இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணை முடிவில் புகாருக்கு முகாந்திரம் இருந்த காரணத்தால், நிகம்பத் நிஷா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோல் நூதனமான முறையில் வாடகை வீடுகளை தனது சொந்த வீடுகளை போன்று குத்தகை விட்டு நிகம்பத் நிஷா மேலும் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுவதால், ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications