சென்னை காவல் ஆணையரின் '100 நாள்' ஆர்டர்.. ஆம்னி பஸ் ஓனர்கள் கடும் எதிர்ப்பு.. முதல்வருக்கு கடிதம்
சென்னை: சென்னை மாநகர காவல் துறைக்கு "விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் சிறைப்பிடிக்க வேண்டும்" என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம். இந்த உத்தரவு பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் திருப்பி ஒப்படைக்கக் கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

"சென்னையில் சில நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் பயணித்தபோது, குழந்தை தவறி விழுந்து லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல் துறைக்கு "விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்கள் சிறைப்பிடிக்க வேண்டும்" என சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டதாக செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம்.
மனித உயிர்களின் மதிப்பை வாகன உரிமையாளர்கள் ஆகிய நாங்கள் நன்கு அறிவோம். சாலை விபத்து என்பது எதிர்பாராதவிதமாக நடைபெறும் ஒன்று. ஓட்டுநர்களோ பொதுமக்களோ வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லை. இவ்வகை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஓட்டுநர் பயிற்சி, மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
ஒரு விபத்து நிகழ்வதற்கு சாலை விதிகளை கடைபிடிக்காத சாலை பயனாளர்கள், கண் மறைவு பிரதேசங்கள், சாலைகள் போன்று பல காரணங்கள் உள்ளது. ஒரு விபத்து நடந்தவுடன் அதனை புலனாய்வு செய்து சாட்சிகளை விசாரித்து அனைத்தையும் சரிபார்த்த பின்பு தான் குற்றவாளி யார் என்று உறுதிப்படுத்த முடியும். ஆனால் விபத்து நடந்த உடனே கனரக வாகனங்கள் மட்டுமே குற்றவாளிகள் என்று முடிவு செய்வது தவறான முன்னுதாரணமாகும்.
எனவே விபத்து நேரிட்டால் 100 நாட்கள் வரை பேருந்துகளை விடுவிக்க கூடாது என்ற சென்னை காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு பேருந்து உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் கடும் பாதிப்பை உருவாக்கும். ஒரு ஆம்னி பேருந்தை வாங்குவதற்கு ரூபாய் 75 முதல் 2 கோடி வரை நாங்கள் முதலீடு செய்கிறோம். விபத்து நேரிட்டால் பேருந்து உரிமையாளர்களாகிய நாங்கள் பெரும் பாதிப்படைவோம் என்பதைக் கருத்தில் கொண்டு நாங்களும் விபத்துக்கள் நடைபெறாத வண்ணம் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இருப்பினும் யாரும் எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்து விபத்து ஏற்படும்போது எங்கள் வாகனங்களை 100 நாட்கள் சிறை பிடித்தால் அந்த வாகனத்திற்கு சாலை வரியாக அரசுக்கு காலாண்டிற்கு குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், பேருந்து மாதத்தவணை ரூபாய் 2 லட்சம் மற்றும் ஓட்டுநர் சம்பளம் பணியாளர்கள் சம்பளம் என முழுமையான நிதிநெருக்கடியும் பயணிகள் சேவையிலும் பாதிப்பும் ஏற்படும்.
ஆகையால் மேற்கண்ட சட்டத்தை மீறிய உத்தரவை ரத்து செய்தும் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.


-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications