கோயம்பேட்டில் ஆம்னி பஸ் ஏற போன இளைஞர்.. சுக்கு நூறாக நொறுக்கப்பட்ட அலுவலகம்.. என்ன காரணம்?
சென்னை: கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாறினாலும், இன்னமும் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து தான் செல்கின்றன. முன்பு போல் வடபழனி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம் வழியாக வருவது இல்லை.. பைப்பாஸ் சாலைகளில் நேராக கிளாம்பாக்கம் வந்து செல்கின்றன. எனினும் கோயம்பேட்டில் பயணிகள் பேருந்திற்கு முன்பதிவு செய்தால், ஏறும் இடம் முன்பு போல் இல்லாமல் சற்று மாறி உள்ளது. இதனை கேள்விப்பட்டு கோபம் அடைந்த இளைஞர் ஒருவர் ஆம்னி பஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் கடந்த 2003ம் ஆண்டு தொடங்கி 2024 வரை கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் ஒருங்கிணைந்த மிகப்பெரிய பேருந்து நிலையம் இருந்தது. ஆனால் 20 ஆண்டுகளில் அண்ணா நகர், முகப்பேர், வடபழனி, மதுரவாயல், போரூர், அரும்பாக்கம், பாடி, திருமங்கலம், கோயம்பேட்டினை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் நெருக்கம் அதிகம் ஆனது. கோயம்பேட்டை கடந்தால் மதுரவாயல் புறநகர் பகுதியாக இருந்தது. ஆனால் இன்று அப்படி இல்லை. கடுமையான நெரிசல் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது.

கோயம்பேடு பேருந்துகள்
கோயம்பேடு செல்லும் ஆம்னி பேருந்துகள் பைப்பாஸ் சாலைகளைவிட, மெயின் சாலையான பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, வடபழனி வழியாகவே சென்றுவந்தன. இதனால் நகருக்குள் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு வார இறுதியும் சென்னையில் வாகனம் ஓட்டுவதும் ஒரு யுகமே ஏற்பட்டது. சென்னையை விட்டு வெளியேறுவது என்பதும் கடும் சவாலாக இருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. கடந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு வரை சென்று வருகின்றன. எனினும் ஒரு பேருந்துகள் ஏறும் இடம் சற்று மாறி உள்ளது. இதனை அறியாமல் சிலர் பரிதவிக்கிறார்கள். அப்படி இடம் மாறியதால் கோபம் அடைந்த இளைஞர், ஆம்னிபேருந்து அலுவலகத்தை அடித்து உடைத்துள்ளார்.
கல்லூரி மாணவர்
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதாகும் ஜான் என்ற கல்லூரி மாணவர், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள நண்பரை பார்ப்பதற்கு வந்து விட்டு நேற்று முன்தினம் இரவு பெங்களூர் செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் சென்றபோது ஆம்னி பஸ் அங்கு வராது என்று கூறியுள்ளார்கள்..
அடித்து நொறுக்கிய இளைஞர்
மேலும் கோயம்பேட்டில் வேறு இடத்திற்கு சென்று ஏறி செல்லுமாறு தனியார் ஆம்னி பஸ் ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நேரடியாக ஆம்னி பஸ் முன்பதிவு அலுவலகத்திற்கு சென்று ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னர் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து ஜானிடம் விசாரணை நடத்தினார். எனினும் கல்லூரி மாணவர் என்பதால். எதிர்காலம் கருதி போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications