ஓஎம்ஆர் மாலில் தியேட்டரில் மனைவியோடு சினிமா பார்த்த மாப்பிள்ளை.. திடீர்னு அலறிய காயத்ரி! பரபர சென்னை
சென்னை: புதுமாப்பிள்ளை, தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, ஜாலியாக ஊர் சுற்றியிருக்கிறார்.. பைக்கில் மனைவியை உட்கார வைத்து, கடைகளுக்கு சென்றுவிட்டு, மனைவிக்கு பிடித்ததையெல்லாம் வாங்கி தந்துள்ளார்.. பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்கும் சென்றுள்ளார்.. பிறகுதான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?
சென்னை மந்தைவெளி, எஸ்பிஐ குடியிருப்பில் வசித்து வந்தவர் மெல்வின்.. இவருக்கு 29 வயதாகிறது.. எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மெல்வின்.. இவருக்கு கடந்த மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.. இவரது மனைவி பெயர் காயத்ரி...

காயத்ரியுடன் சினிமா
2 நாட்களுக்கு முன்பு விடுமுறை நாள் என்பதால் தம்பதி இருவரும் வெளியில் சென்றுவர விரும்பினார்கள்.. இதற்காக பைக்கில் கேளம்பாக்கம் அருகே ஓஎம்ஆர் மாலுக்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள தியேட்டரில் படம் பார்க்கவும் முடிவு செய்துள்ளனர்..
டிக்கெட் வாங்கி இருவரும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது மெல்வினுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்ரி, தியேட்டரில் இருந்தவர்களிடம் இதை பற்றி சொல்லியிருக்கிறார்..
உடனே அங்கிருந்தவர்கள், மெல்வினை தியேட்டரிலிருந்து வெளியே கொண்டுவந்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மெல்வின் இறந்து விட்டதாக அறிவித்தனர்..
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்
மாரடைப்பால் உயிர் போயிருப்பதாக டாக்டர்கள் சொன்னதை கேட்டு, காயத்ரி அலறி துடித்தார்.. பிறகு இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மெல்வினின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மெல்வினுக்கு ஏற்னவே இதயம் சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளதா? ஷாப்பிங் மாலில் சுற்றிப்பார்த்தபோது, ஏதாவது ஒவ்வாத உணவை சாப்பிட்டாரா? என்று தெரியவில்லை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுக்காக போலீசார் காத்துள்ளனர்.. அந்த அறிக்கையை வைத்தே , மெல்வின் மரணம் குறித்து தெரியவரும் என்கிறார்கள்.
புதுப்பெண் காயத்ரி
புதுமணப்பெண் காயத்ரி பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவராம்.. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மெரினா மாலுக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளனர். அங்கிருந்த தியேட்டரில்தான், படம் பார்த்திருக்கிறார்கள்.. மூச்சுவிட முடியாமல் கணவன் துடிப்பதை கண்டு பதறி காயத்ரி, தியேட்டரிலேயே துடிதுடித்து கதறியிருக்கிறார்.. அதற்கு பிறகே அங்கிருந்தவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர்.
சமீபகாலமாக இளம்வயது மரணம், அதிலும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது.. உடல் ஆரோக்கியத்துக்காக ஜிம்முக்கு செல்பவர்கள் முதல், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரையிலும் இந்த மாரடைப்பு பற்றிக் கொண்டுள்ளது.. இந்த இளம்வயது மாரடைப்புக்கான காரணம் என்ன என்பது குறித்த ஆய்வுகளிலும் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்..
இளம் வயது மாரடைப்பு
எனினும், 2019ம் ஆண்டுக்கு பிறகு 25 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளதாகவும், அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதற்கு சிகரெட், குடி பழக்கம் காரணமாக இருக்கிறது என்றும் காரணங்கள் கூறப்படுகின்றன.
கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நபர்களும், குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு உள்ள நபர்களுக்கும் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருப்பதாகவும், தீவிர உடற்பயிற்சி, உடல் சதையை அதிகரிக்க எடுத்துக் கொள்ளப்படும் புரதச் சத்து மருந்துகள் மூலம் இந்த நபர்களுக்கு மாரடைப்பு திடீரென்று ஏற்படுவதாகவும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
எனினும், இந்த மாரடைப்பு இளம்மரணங்கள் பொதுமக்களுக்கு ஒருவிதமான கலக்கத்தையும், அச்சத்தையும் உண்டுபண்ணி வருகிறது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications