தலையே சுத்துதே.. "தலைமைக்கழகம்" திடீர் அழைப்பு.. திகைக்கும் எடப்பாடி பழனிசாமி.. குலுங்கபோகுது சென்னை
சென்னை: அடுத்து என்ன செய்வது? என்ற குழப்பத்திற்கும், கலக்கத்திற்கும் ஆளாகி உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், புது அதிரடியை கையில் எடுத்துள்ளார்.
அதிமுகவின் கொடி, சின்னம் போன்றவற்றை, ஓபிஎஸ் பயன்படுத்த பயன்படுத்த ஹைகோர்ட்டு தடை விதித்துள்ளது... எனவே, இவைகளை ஓபிஎஸ் பயன்படுத்துவதில்லை..

வெளிநாடு: சமீபத்தில், வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து, சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கிய ஓபிஎஸ், அதிமுக கொடி இல்லாத காரில்தான் பயணம் செய்தார்... அதன் பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்துக்குவந்தபோதும், கரை வேட்டி அணியவில்லை.
ஒருபக்கம் சட்டரீதியாகவும், மற்றொருபக்கம் கட்சி ரீதியாகவும் விவகாரங்களை எதிர்கொண்டு வருகிறார். இதற்கு நடுவில், தன் பக்கமுள்ள நிர்வாகிகளையும் தக்க வைக்க வேண்டிய நெருக்கடி, இன்று ஓபிஎஸ்ஸுக்கு ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளால், அடுத்தடுத்து கிடைத்துவரும் பின்னடைவுகள் காரணமாக, ஓபிஎஸ் நிர்வாகிகள் பலர் நொந்து போய் உள்ளார்களாம்.. இப்படி அதிருப்தியில் இருப்பவர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வலை விரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிகிறது. எனவே, தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவாளர்களையும், இறுக்கமாக கையில் வைத்திருகக் வேண்டிய அவசியம் ஓபிஎஸ்ஸுக்கு வந்திருக்கிறது.
அரசியல் நிலைப்பாடு: போதாக்குறைக்கு எம்பி தேர்தலும் நெருங்கிவிட்டதால், அவரது அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.. எனவே, இவைகள் அனைத்துக்குமே தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.. பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான, மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது.. இதில், என்ன முடிவு வரப்போகிறதோ தெரியவில்லை.
இப்படி நாலாபக்கமும் சிக்கல்கள் உள்ள நிலையில், நாளை மறுநாள் திங்கட்கிழமை, சென்னையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.. எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இலை, சின்னம்: இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், "அதிமுக" என்ற பெயரை பயன்படுத்தாமல், "தலைமைக்கழகம்" என்றே அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதேபோல, இரட்டை இலை சின்னமோ, அதிமுக நிறமோ இல்லாமல் வெறும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.
எனினும், எதற்காக இந்த ஆலோசனை கூட்டம் என்று தெரியவில்லை.. கோவையில் ஜனவரி 6-ல் மண்டல மாநாடு நடப்பதாக கூறியிருப்பதால், அதுகுறித்து ஆலோசனை நடக்கலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு மாநாடு நடத்தலாமா? என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சுற்றுப்பயணம்: வரும் 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்வதுடன், அதற்கு பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அதுகுறித்தும் ஆலோசிக்கலாம்.
அதைவிட முக்கியமாக, வரப்போகும் நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் பின்னடைவாக அமைந்துவிட்டால், புது கட்சி துவங்கலாமா? என்ற யோசனையும் ஓபிஎஸ்ஸூக்கு உள்ளதாக சொல்கிறார்கள்.. இதை பற்றியும் ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கப்படலாம் என தெரிகிறது.
ஆக, எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் நாளை மறுநாள் கூட்டியிருக்கும் இந்த கூட்டம், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிது. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் அமைதியாக கவனித்து வருகிறது..!!!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications