சென்னை மெட்ரோ வாட்டருக்காக ஆன்லைனில் புக் செய்துவிட்டு தவம் கிடக்கும் குடியிருப்புவாசிகள்
சென்னை: சென்னை குடிநீர் வாரிய லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால், குடியிருப்புவாசிகள் தண்ணீர் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
சென்னையில் வேளச்சேரி பெருங்குடி மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது சென்னை குடிநீர் வாரிய லாரிகளை மட்டுமே நம்பியுள்ள இவர்கள் தண்ணீர் கேட்டு ஆன்லைனில் பதிவு செய்து பல நாட்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்

இது பற்றி பேசிய குடியிருப்புவாசிகள் ஏப்ரல், மே, ஜூன் இந்த மாதங்களில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைக்காது. ஆன்லைனில் மெட்ரோ வாட்டர் புக் செய்வதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மாலை 5 மணிக்கு சில நேரங்களில் தண்ணீர் புக் செய்ய முயற்சித்தால், அதற்குள்ளாகவே புக்கிங் முடிந்துவிடுகிறது என கூறினர். மேலும் தண்ணீருக்காக பதிவு செய்து 10 நாட்களாகியும் கிடைப்பதில்லை. தினமும் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.

மெட்ரோ தண்ணீர் சப்ளை செய்ய கூடிய இடங்களிலேயே தண்ணீர் இல்லாததால் தான் காலதாமதம் ஆவதாக அதிகாரிகள் கூறுவதாக மக்கள் குறிப்பிட்டனர். இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் தண்ணீர் லாரிகள் 24 மணிநேரமும் ஓட்டுவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது
இதனால் விபத்து ஏற்படுவதாக வந்த புகாரையடுத்து தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர் லாரி டிரைவர்கள் குறைந்த வேகத்தில் நிதானமாக ஓட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications