Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை 5 கோடி நகை கொள்ளை.. வெல்டிங் மிஷினுடன்.. காஸ்ட்லி காரில் பக்கா ஸ்கெட்ச்.. பரபர சிசிடிவி

சென்னை பெரம்பூரில் 9 கிலோ நகை கொள்ளைக்கு பெரிய ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது,. வெல்டிங் மிஷினுடன் இன்னோவா காரில் வந்து ரூ.5 கோடி நகைகளை கொள்ளையடித்து தொடர்பான பரபர சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியை இப்போது பார்ப்போம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர் ஸ்ரீதர். இவர் தனது பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில் சாலையில் நகைக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் முதல் தளத்தில் நகைக்கடையும், இரண்டாம் தளத்தில் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடனும் வசித்து வருகிறார்.

சம்பவம் நடப்பதற்கு முன்பு அன்று இரவு நகைக்கடையில் வியாபாரம் செய்து விட்டு ஊழியர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். காலை 9 மணி அளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்கு முன்பு, கடையின் முன்பக்க ஷெட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

20 லட்சம் வைரம்

20 லட்சம் வைரம்

கடையின் உள்ளே சென்று பார்த்த போது, லாக்கர் கதவை கட் செய்து அதில் இருந்த 5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பு வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த ஸ்ரீதருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சில நகைகள் நகைக்கடையின் கீழே சிதறி கிடந்தது.

கொள்ளையர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க சிசிடிவி கம்ப்யூட்டர் இருக்கும் பக்கம் சென்றுள்ளார் ஸ்ரீதர். அப்போது சிசிடிவி வயரை அறுத்துவிட்டு ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதர் கொள்ளை சம்பவம் குறித்து சென்னை திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் வருகை

போலீஸ் வருகை

சென்னையில் பெரம்பூரில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியான பேப்பர் மில்ஸ் சாலையில் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வர் உள்ளிட்டோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவு சேகரிக்கப்பட்டன. மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு இரண்டு மணிக்கு இனோவா காரில் வந்த கும்பல் ஒன்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 2 மணிக்கு வந்த கார், 3 மணிக்கு திரும்பிச் செல்வதாக சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது. 5 கிலோ சிலிண்டரை பயன்படுத்தி நகைக்கடை ஷட்டரை வெல்டிங் உதவியுடன் சத்தம் இல்லாமல் துளையிட்டு கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது.

எப்படி போனார்கள்

எப்படி போனார்கள்

போலீசார் ரோந்து பணிக்கு வராத நேரத்தை கணித்து, கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் மேற்பார்வையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். கொள்ளையர்களின் துணிகர செயலால் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மற்றக்கடையில் உள்ளவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே சென்னை பெரம்பூரில் 9 கிலோ தங்கம், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கொள்ளை கும்பல் காரில் தப்பிச் செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையை நடத்திவிட்டு கோயம்பேடு, மதுரவாயல் வழியாக பூந்தமல்லி நோக்கி கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நகை கொள்ளையர்கள்

நகை கொள்ளையர்கள்

இதனிடையே கார் பதிவு எண்களை வைத்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தனிப்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையர்கள் நகைகளுடன் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்றுவிட வாய்ப்பு உள்ளதால், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி பதிவுகளை வாங்கியும் விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+