பெருங்குடியில் வருது மாற்றம்.. நாலாபக்கமும் சுழலும் சென்னை மாநகராட்சி ஆபீசர்ஸ்.. மேயர் பிரியா அதிரடி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் சராசரியாக 5,100 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டும் வருகின்றன.
குறிப்பாக, பெருங்குடி குப்பை கிடங்கு 225 ஏக்கர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கிறது. இவற்றில் பல வருடங்களாகவே, சேர்ந்துள்ள 30 லட்சம் கன மீட்டர் குப்பையை முழுமையாக மறுசுழற்சி செய்து, 100 சதவீத நிலத்தை மீட்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

பணிகள்: பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பயோ மைனிங் முறைக்காக, சுமார் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தையும் எட்டிவிட்டன.. இந்த குப்பை கொட்டும் வளாகத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது.
அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் சட்டசபை கூட்டத்தில், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்திருந்தார். தற்போது, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், இதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சொல்லி உள்ளதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்குடியில் குப்பை கொட்டும் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வருகிற 8-ந் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
அறிவிப்பு: இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications