Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று முதல் மேஜர் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளே கவனமாக போங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் டிராபிக் நெரிசல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. டிராபிக் நெரிசலைக் குறைக்கச் சென்னை போலீசார் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகே இன்று முதல் முக்கியமான போக்குவரத்தை மாற்றத்தைச் சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஏற்கனவே பஸ், புறநகர் ரயில், மின்சார ரயில்கள் என ஏகப்பட்ட பொது போக்குவரத்து ஆப்ஷன்கள் இருந்தாலும் கூட டிராபிக் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் நகரில் பல்வேறு இடங்களிலும் டிராபிக் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

traffic police

சென்னை டிராபிக்

டிராபிக் சிக்கலைச் சரி செய்யச் சென்னை போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். டிராபிக் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்குத் தேவையான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. நகரில் டிராபிக் பாதிப்பு அதிகம் ஏற்படும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. இது டிராபிக்கை குறைக்கப் பெரியளவில் கை கொடுக்கிறது.

சென்னையில் அப்படி டிராபிக் நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று காந்தி மண்டபம் சந்திப்பு. அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, சிஎல்ஆர்ஐ, கிண்டி குழந்தைகள் பூங்கா, காந்தி மண்டபம் எனப் பல முக்கிய இடங்கள் சுற்றிலும் இருப்பதால் வார நாட்களிலும் சரி, வார இறுதி நாட்களிலும் சரி நெரிசல் அதிகமாகவே இருக்கும்.

போக்குவரத்து மாற்றம்

ராஜ் பவனில் இருந்து மத்திய கைலாஷ் செல்வதற்குள் ஒரு வழியாகிவிடுவோம். இதைக் கருத்தில் கொண்டே இந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கைலாஷ் செல்லும் ரூட்டில் டிராபிக் பாதிப்பைக் குறைக்க அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிராபிக் போலீஸ்

இது தொடர்பாகச் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெருநகர காவல் துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாகப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டு, மேலும், அவை மே 21 (புதன்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன

கிண்டி ராஜ்பவனில் இருந்து சர்தார் படேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

நேராகச் செல்ல அனுமதியில்லை

காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும். மேலும், அந்த வாகனங்கள் நேராக (மத்திய கைலாஷ் நோக்கி) செல்ல அனுமதிக்கப்படாது. இந்த மாற்றுப் பாதைகளை ஏற்படுத்த, சிஎல்ஆா்ஐ பேருந்து நிறுத்தம் ஏற்கெனவே உள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+