புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ரெடியாகும் சென்னை! சியர்ஸ் சொன்னால் சிறை தான்! சென்னை போலீஸ் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், பந்தயத்தில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி காணப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மெரினா பீச் பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் கொண்டாட்டங்கள் கரைபுரண்டு ஓடும்.

new year 2025 chennai police

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் தலைமையில் காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம்:

இதில் சென்னை பெருநகரில் பணிபுரியும் கூடுதல் காவல் ஆணையாளர்கள். இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டனர். 31.12.2024 அன்று இரவு 9.00 மணியிலிருந்து காவல் அதிகாரிகள்,காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு குழு:

முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.

கடலில் குளிக்க தடை:

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2024 மாலை முதல் 01.01.2025 பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ. குளிக்கவோ அனுமதி இல்லை. வரை கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யவும், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள். குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும். மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தவும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும். முக்கிய இடங்களில் Drone Cameraக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

எச்சரிக்கை பதாகை:

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஆம்புலன்ஸ் சேவை:

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை:

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளின் விண்ணப்பங்கள் போலீசாரால் சரிபார்ப்பு செய்யும்போது பாதிப்பு ஏற்படும் என்பதால் இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+