சென்னை ஆட்டோக்கள், வாடகை கார்களில் க்யூ ஆர் கோடு கட்டாயம் ஏன்.. கமிஷனர் அருண் விளக்கம்
சென்னை: சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி QR குறியீடு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிலையில் வாடகை வாகனங்களில் க்யூ ஆர் கோடு கட்டாயமாக ஒட்டி இருக்க வேண்டும். க்யூ ஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இயக்கப்படும் அனைத்து கார், டாக்ஸி உள்ளிட்ட வாடகை வாகனங்களில் இந்த QR குறியீட்டை ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. QR குறியீடுகளை போலீசார் ஒட்டி வருகிறார்கள். வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்பவர்கள் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் போதும், உடனடியாக காவல்துறை எஸ் ஓ எஸ் செயலியில் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கவனித்து உதவி செய்வார்கள்..
இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் ஆபத்தான நேரங்களில் காவல்துறையை எளிதில் அணுகும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு காவல் உதவி QR குறியீடுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், " சென்னையில் கார், ஆட்டோ உள்ளிட் வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
அதன்படி வாடகை வாகனங்களில் பயணிக்கும் போது ஏதாவது அச்சம் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக வாடகை வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள காவல்துறை QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது உடனடியாக காவல்துறை எஸ் ஓ எஸ் செயலியில் தொடர்பு கொள்ளலாம். அப்படி செய்தால் உடனடியாக அந்த வாகனம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிப்போம். பின்னர் அந்த வாகனம் குறித்து அருகே உள்ள ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோருக்கு உடனடியாக உதவி செய்வோம்.
QR குறியீட்டில் அந்த வாகனம் பற்றிய அனைத்து தகவல்களும் போலீசுக்கு வந்துவிடும். வாகன ஓட்டுநர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் எங்களுக்கு தெரிந்துவிடும். அதை வைத்து அந்த வாகனம் சென்று கொண்டிருக்கும் இடம், ஓட்டுநர் பற்றிய விவரங்களை எளிதில் காவல்துறையினர் தெரிந்து கொள்ள க்யூ ஆர் குறியீடு நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
சென்னையில் இயக்கப்படும் அனைத்து வாடகை வாகனங்களும் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஓட்டுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. க்யூ ஆர் குறியீடு ஒட்டிய பிறகு அதை நீக்கினால் வாகன ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் பெருநகர சென்னை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்" இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறினார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications