சென்னை மாநகராட்சியுடன் கைகோர்த்த காவல்துறை.. பிடிப்பட்டால் உடனே வழக்கு.. அதிரடி முடிவு
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித் திரியும் நிலையில், அவற்றை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் சென்னை காவல்துறையினரும் இணைந்துள்ளனர். பிடிக்கப்படும் மாட்டின் உரிமையாளர் மீது போலீஸாரே நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் அதிகம்.. இந்த சூழலில் மாடுகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிகின்றன. அப்படி சுற்றித் திரியும் மாடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறம் எனில், மாடுகள் அவ்வப்போது மனிதர்களை பயங்கரமாக தாக்கி விடுகின்றன. மாடுகள் அடிக்கடி முட்டி தூக்கி உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதேபோல் திடீரென குறுக்கே வரும் மாடுகளால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதும் நடக்கிறது.

சென்னையில் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும். இல்லாவிட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும். இதுதான் எதார்த்தம்.
கடந்த இரண்டு மாதம் முன்பு சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு அம்மா உடன் சென்று கொண்டிருந்த ஆயிஷா என்ற சிறுமியை தெருவில் சுற்றிய மாடு கொடூரமாக முட்டி தள்ளியது. இதில் அந்த சிறுமி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தெருவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக இறங்கியது. ஆனால் அதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் மாநகராட்சி அப்போது கடும் நடவடிக்கை எடுத்ததுடன், மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்தது.
ஆனாலும் தெருக்களில் மாடுகளின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாத நிலை சென்னை முழுக்க உள்ளது . இந்த சூழலில் கடந்த அக்டோபர் 18-ந்தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டியது. இதில் சுந்தரம் படுகாயமடைந்தார். இதையடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கண்டிப்பாக பிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதன்படி மாநகராட்சி ஊழியர்கள் திருவல்லிக்கேணி தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்தனர். இதேபோல் சென்னை முழுக்க மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.
இதனிடையே பிடிக்கப்படும் மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டாவிட்டால் மாடுகள் ஏலம் விடப்படும். அல்லது கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல் மாட்டின் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதுதான் இப்போது உள்ள நடைமுறை.
இந்நிலையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் ஏற்படுவதால், மாநகராட்சியுடன் சென்னை காவல்துறையும் இணைந்து மாடுகளை பிடிக்க உள்ளது. காவல்துறையால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர் மீது போலீஸாரே நேரடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். போலீசார் இந்த விஷயத்தில் தீவிரமான நடவடிக்கை எடுத்தால் தான் சென்னை மாடுகள் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications