டேக் டைவர்சன்.. பேய் மழையால் சென்னையில் முடங்கிய போக்குவரத்து! மக்களுக்கு போலீசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: பெரு மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக சென்னையில் மாற்றப்பட்டு உள்ள போக்குவரத்து, அடைக்கப்பட்டு உள்ள சுரங்கப்பாதைகள் தொடர்பாக காவல் துறை விளக்கம் கொடுத்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "இன்று (04.12.2023) மிக்ஜாம் புயலை (வடகிழக்கு பருவமழை) முன்னிட்டு சென்னை பெருநகர காவல் வரம்பில் தற்போதைய நிலவரம்.

1. சென்னை பெருநகரில் தற்போதைய போக்குவரத்து நிலவரம்:
இரவு 8.30 மணி முதல் அதிகாலை 04.30 மணி வரை 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மற்ற சாலைகளில் குறைந்தபட்சம் 1 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. விமான நிலையத்திலிருந்து அண்ணாசாலை வரை பசுமை வழித்தடம் (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. அவசர தேவைக்காக அண்ணாசாலை மற்றும் ஈ.சி.ஆர்.ல் பசுமை வழிச்சாலையை பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2. சென்னை பெருநகரில் உள்ள முக்கிய சாலை போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.
3. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர். பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதை அகற்றி வருகின்றனர்.
4. சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTS) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்: அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து செயல்படுகின்றன.
சென்னையில் அடையார்- போர்ட்டிஸ் மலர் மருத்துவமனை அருகில், சாஸ்திரி பவன் - ஹடோஸ் சாலை, ஆயிரம் விளக்கு- காதர் நவாஸ்கான் ரோடு கீரிம்ஸ் ரோடு, லயோலா கல்லூரி-லிபா கேட், எழும்பூர் காவல் மருத்துவமனை அருகில், தி.நகர்- கமலாலயம், கீழ்பாக்கம் நியூ ஆவடி ரோடு, கொருக்குப்பேட்டை நாகப்பன் தெரு, அண்ணா நகர் 3 வது அவென்யூ 6வதுஅவென்யூ, வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு, வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அருகில் மற்றும் மண்டலம் அலுவலகம்-1 என மொத்தம் 16 இடங்களில் சாலையில் விழுந்த மரங்களை மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டது.
கோயம்பேடு பேருந்து நிறுத்தம், கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, வள்ளுவர் கோட்டம் ஹை ரோடு, சிந்தாதிரிப்பேட்டை என்.எம் காலனி என 4 இடங்களில் விழுந்த மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
5. மற்றவைகள்:
÷ நீர் தேங்கியதால் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்:
1. கணேசபுரம் சுரங்கப்பாதை
2. கெங்குரெட்டி சுரங்கப்பாதை
3. செம்பியம் சுரங்கப்பாதை
4. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
5. துரைசாமி சுரங்கப்பாதை
6. மேட்லி சுரங்கப்பாதை
7. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
8. மவுண்ட்- தில்லைநகர் சுரங்கப்பாதை
9. சைதாப்பேட்டை- அரங்கநாதன் சுரங்கப்பாதை
10. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
11. C.B. சாலை சுரங்கப்பாதை
12. வியாசர்பாடி சுரங்கப்பாதை
12. திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
14. RBI சுரங்கப்பாதை
15. கோயம்பேடு, புது பாலம் சுரங்கப்பாதை
16.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை
17.சூளைமேடு லயோலா சுரங்கப்பாதை
சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் அகற்றுதல்: சென்னை பெருநகரில் 16 இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.
பதிவாகியுள்ள இறப்புகள்: இல்லை
நீரில் மூழ்குதல் / மின்சாரம் தாக்குதல் மற்றும் மருத்துவ உதவிகள் விபரம்: இல்லை." என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications