சர்ச்சை பேச்சு.. நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. சென்னை போலீசார் அதிரடி
சென்னை: நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரில், மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர் நீதிமன்றத்தில் இதற்குரிய மன்னிப்பினை கேட்க வேண்டும். அவர் மீது காவல் துறை மூலமாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தது.

இந்த அடிப்படையில் தான் தற்போது, நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருபிரிவு மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல், மொழி, இனம், மதம் பற்றி கூறி இருபிரிவு மக்கள் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது கஸ்தூரி, "300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இங்கு தமிழர்கள் முன்னேற்ற கழகம் என்று யாரும் வைக்க முடியவில்லை" என்ற கருத்தை பேசினார்.
நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சானது பெரும் சர்ச்சையானது. பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, தான் பேசிய கருத்துக்கள் திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "எதையும் புதிதாக சொல்லவில்லை. அதே நேரத்தில் தவறாகவும் சொல்லவில்லை. வைகோ, காந்தாராஜ் சொன்னதை தான் நானும் கூறினேன். திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுபவர்களை சொன்னால், அதை தெலுங்கு மக்களை சொன்னதாக திசை திருப்பியோரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நானும் தெலுங்கு தான்" என்று கூறினார்.
எனினும் தொடர்ந்து சர்ச்சைகள் அதிகமானதால், தெலுங்கு பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு நாட்களாக எனக்கு தொடர்ந்து மிரட்டல்களும், எனக்கு எதிராக தாக்குதல்களும் அதிகமாக வந்தன. எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் நல்ல குடும்பத்தை தெலுங்கு மக்கள் வழங்கி உள்ளனர்.
நான் சொன்ன கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சூழல்களை சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானது கிடையாது என்ற கருத்தை நான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கூறுகிறேன். நான் கவனக்குறைவாக பேசிய சில வார்த்தைகள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். நாம் கடந்த 3 ஆம் தேதி பேசிய உரையில் தெலுங்கு மக்களுக்கு எதிரான எனது அனைத்து பேச்சுக்களையும் திரும்பப் பெறுகிறேன். என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications