பட்டியலின மக்கள் மீது அவதூறு- மீரா மிதுன் ஆஜராக போலீஸ் சம்மன்- வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது?
சென்னை: பட்டியலின சமூகத்தினர் ஏமாற்று பேர்வழிகள்; அந்த சமூகத்தை சேர்ந்த அனைவரையும் சினிமாவை விட்டே துரத்த வேண்டும் என்று இழிவாக பேட்டி கொடுத்த நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மீரா மிதுன் பேசிய இழிவான பேச்சுகளுக்காக அவர் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி என சில படங்களில் நடித்தார். பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் பாராட்டும் இயக்குநர் சேரன் மீது கேவலமான அவதூறுகளை சொல்லி கடும் விமர்சனத்துக்குள்ளானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தவிர வேறு எதனையும் போடக் கூடாது என்பதாகவே செயல்பட்டு வருகிறார்.

அத்தனை பேருடனும் வம்பு
நடிகர்கள் அஜித், சூர்யா, விஜய் என அனைத்து தரப்பு ரசிகர்களுடன் மோதி வாங்கிக் கட்டிக் கொண்டார் மீரா மிதுன். இந்த நிலையில்தான் அண்மையில் பேட்டி ஒன்று அளித்த மீரா மிதுன் பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்கிற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் கொட்டி தீர்த்தார். பட்டியலின மக்களை குறிப்பிட்டே மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் மீரா மிதுன்.

தலித்துகளுக்கு எதிராக பேச்சு
பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என ஏகத்துக்கும் இழிவுபடுத்தி பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மீரா மிதுன் மீது புகார்
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

மீரா மிதுனுக்கு சம்மன்
வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications