ஜெய்பீம் படம்.. ராஜாக்கண்ணுவின் மருமகனுக்கு லுங்கியுடன் வர கமிஷனர் அலுவலகம் அனுமதி மறுப்பு
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தினுள் லுங்கியுடன் புகார் அளிக்க சென்ற ஜெய்பீம் ராஜாக்கண்ணுவின் மருமகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வேட்டி அணிந்து கொண்டு புகார் அளிக்க வந்தார்.
ஜெய்பீம் என்ற திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோஸ் ஆகியோர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியானது.
இந்த படம் ராஜாக்கணு என்ற பழங்குடியினத்தை சேர்ந்த நபரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவம் என்பதால் இது பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரம் அதில் உண்மைக்குப்புறம்பான சில விஷயங்கள் இருப்பதாக கூறி பாமக, காடுவெட்டி குருவின் மகன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகிய இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய கதாபாத்திரம்
இந்த நிலையில் ஜெய்பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ராஜாக்கண்ணுவின் சகோதரியின் மகன் குளஞ்சியப்பன். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஜெய்பீம் படம் தொடர்பாக நேற்றைய தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

லுங்கி
அப்போது அவர் லுங்கியுடன் இருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவருக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி வாங்கி கொடுத்தனர். இதையடுத்து அவர் வேட்டியை கட்டிக் கொண்டு புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.

பொது மக்கள் கோரிக்கை
சாமானிய மக்களும் வந்து செல்லும் காவல் துறை அலுவலகத்திற்கு ஆடை கட்டுப்பாடுகளை போலீஸார் விதிப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்கள் அவரவர் அணிந்துள்ள உடையில் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications