தண்ணீரோ தரையோ! அண்ணாமலை யாத்திரைக்கு சென்னையில் அனுமதி இல்லை! போலீஸ் கேள்வியால் பாஜக திணறல்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் யாத்திரை சென்னையில் நடத்த போலீஸார் அனுமதி மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு விளக்கவும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை எடுத்துரைக்கவும் என் மண் என் மக்கள் எனும் யாத்திரையை தொடங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து தினம் ஒரு தொகுதிகளில் பொதுக் கூட்டத்தை நடத்தினார். பிப்ரவரி 10 ஆம் தேதி உத்தரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் கூட்டத்தை நடத்தினார்.
இந்த நிலையில் 200ஆவது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதியில் கடந்த 11 ஆம் தேதி அண்ணாமலை நடைப்பயணம் செய்வதாக இருந்தது. அதைத் தொடர்ந்து மற்ற தொகுதிகளிலும் நடைபயணம் செல்ல அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். ஆனால் சென்னையில் எந்த பகுதியிலும் நடைப்பயணம் செல்வதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதனால் அரங்க கூட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. தரை பகுதியில் சென்றால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் போலீஸார் மறுக்கிறார்கள். சரி தண்ணீரில் சென்றால் யாருக்கும் எந்த இடையூறும் இருக்காதே என நினைத்து பாஜக மீனவர் அணி சார்பில் இன்றைய தினம் நீலாங்கரையில் இருந்து பாலவாக்கம் வரை கடலில் படகுகளில் கடல் தாமரை யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு எப்படி அனுமதி மறுக்க முடியும் என்ற எண்ணத்தோடு போலீஸார் அனுமதிக்காக கேட்டுள்ளனர். உடனே போலீஸ் தரப்பில் இருந்து எத்தனை படகுகள் கலந்து கொள்கின்றன என கேட்டுள்ளனர். அதற்கு பாஜக மீனவர் அணியினர் 300 என்றதும் அதை 100ஆக குறைத்து கொள்ளுங்கள் என போலீஸ் தரப்பில் கூறியிருக்கிறார்கள்.
அதனால் பரவாயில்லை என்ற முடிவுக்கு மீனவர் அணி வந்து 100 படகுகளுடன் கடல் தாமரை யாத்திரையை நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில்தான் போலீஸார் தரப்பில் இருந்து 8 கேள்விகளை கேட்டு பாஜகவினரை திணற வைத்தனராம்.
எத்தனை படகுகள் யாத்திரையில் கலந்து கொள்கின்றன?
யாத்திரையில் பங்கெடுக்கும் படகுகள் அனைத்தும் மீன்வளத் துறையில் பதிவு செய்யப்பட்டதா, அப்படியென்றால் பதிவு எண் என்ன?
- யாத்திரையில் கலந்து கொள்வதற்கு மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளதா
- கடற்கரையில் கூடுவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி பெறப்பட்டு உள்ளதா?
- கடலில் செல்வதால் கடற்படை, கடலோர காவல் படையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
- யாத்திரையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் எத்தனை பேர்? அவர்களுக்கு நீச்சல் தெரியுமா?
- பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?
- விபத்தை தவிர்க்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன
மீனவர்களிடம் நீந்த தெரியுமா என கேட்டது அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று நடைபெறவிருந்த கடல் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications