கடலில் விரியும் ‘மெகா’ பிளான்.. சென்னையை அடியோடு மாற்ற போகும் திட்டம் இதுதான்.. ப்ளூ பிரிண்ட் ரெடி
சென்னை: வங்கக்கடலின் அலைகளை விடவும் வேகமாக எகிறிக் கொண்டிருக்கிறது சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சி வேகம்! 'சரக்குப் போக்குவரத்தில் மந்தநிலை' என்ற பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த நிதியாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது 'சென்னை போர்ட்'.
மெகா டெர்மினல்: சென்னையின் அடுத்த 'கேம் சேஞ்சர்'!
சென்னைத் துறைமுகத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வெளித் துறைமுகத்தில் (Outer Harbour) பிரம்மாண்டமான கன்டெய்னர் முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகிகள் பேசுகையில்,
"சுமார் 2 கி.மீ நீளமுள்ள படகுத்துறை (Quay length) மற்றும் 90 ஹெக்டேர் பரப்பளவிலான சேமிப்புக் கிடங்கு வசதிகளுடன் இந்த மெகா முனையம் அமையவுள்ளது. இது சென்னைத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனைப் பன்மடங்கு அதிகரிப்பதோடு, தென்னிந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக நுழைவுவாயிலாக சென்னையைத் தக்கவைக்கும்" என்றுள்ளனர்.

சாதனைப் பயணம்: இலக்குகளை முன்கூட்டியே எட்டிய வேகம்!
கடந்த நிதியாண்டில் (FY25) 1.82 மில்லியன் கன்டெய்னர்களைக் (TEUs) கையாண்டு சாதனை படைத்திருந்தது சென்னைத் துறைமுகம். ஆனால், இந்த முறை மார்ச் 11-ஆம் தேதியே 1.83 மில்லியன் கன்டெய்னர்களைக் கையாண்டு, தனது பழைய சாதனையைத் தவிடுபொடியாக்கியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விட 20 நாட்களுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை எட்டிப் பிடித்துள்ளது.
கன்டெய்னர்கள் மட்டுமின்றி, மொத்த சரக்குப் போக்குவரத்திலும் சென்னை 'கெத்து' காட்டியுள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதியே 50 மில்லியன் டன் என்ற இலக்கை இந்த நிதியாண்டில் (FY26) கடந்துவிட்டது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 18 நாட்களுக்கு முன்பே எட்டப்பட்ட வெற்றியாகும்.
போட்டிக்கு மத்தியிலும் முதலிடம்!
அருகிலுள்ள மற்ற அரசு மற்றும் தனியார் துறைமுகங்கள் கடுமையான போட்டியைத் தந்தபோதிலும், சென்னைத் துறைமுகம் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 6 புதிய கப்பல் சேவைகள் (Shipping Services) தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்களின் தொடர் ஆதரவு, புதிய சேவைகள் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் என சென்னைத் துறைமுகம் இப்போது அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
சென்னை வளர்ச்சி
இத்திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டின் பொருளாதார வளர்ச்சியிலும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக (Game Changer) அமையும் என்பதில் சந்தேகமில்லை. முதலாவதாக, சென்னைத் துறைமுகத்தின் இந்த 'மெகா டெர்மினல்' விரிவாக்கம், தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும். தற்போதுள்ள சரக்குக் கையாளும் திறன் அதிகரிப்பதால், தொழிற்சாலைகளில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான காத்திருப்பு நேரம் (Waiting time) கணிசமாகக் குறையும்.
இது சென்னை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும். சரக்குப் போக்குவரத்துச் செலவு குறைவதால், உலகளாவிய சந்தையில் தமிழகப் பொருட்களின் விலை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும். இது புதிய பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யத் தூண்டுவதோடு, மாநிலத்தின் 'ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார' இலக்கை எட்டுவதற்கு மிக முக்கியமான அடித்தளமாக அமையும்.
இரண்டாவதாக, இந்த விரிவாக்கத் திட்டம் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. துறைமுகச் செயல்பாடுகள் அதிகரிப்பதால் கப்பல் போக்குவரத்து, சரக்குக் கிடங்குகள் (Warehousing), லாரி போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகும்.
குறிப்பாக, நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மெகா முனையம், கடல்சார் பொறியியல் மற்றும் டிஜிட்டல் லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த நிபுணர்களுக்கான தேவையை அதிகரிக்கும். மேலும், சென்னைத் துறைமுகம் ஒரு வலுவான சர்வதேச நுழைவுவாயிலாக (Gateway) மாறுவது, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் (MSMEs) உலகச் சந்தையுடன் இணைக்க உதவும். இது சென்னையைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், சாலை மேம்பாடு மற்றும் நகரமயமாக்கலைத் துரிதப்படுத்தி, ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் ஒரு பெரும் சக்தியாகத் திகழும்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications