மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்கு சேகரிப்பு
சென்னை: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குப்பதிவு வரும் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வசதிக்காக அஞ்சல்வழி வாக்குப்பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், வசிப்பிடங்களுக்கு நேரில் சென்று வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பணியில் உள்ளவர்களும் தங்கள் வாக்குகளை அஞ்சல்வழி செலுத்த முடியும். தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஏப்ரல் 11 முதல் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது.
இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர்கள், காவலர், ஒளிப்பதிவாளர் ஆகியோரைக் கொண்ட குழு வீடு தேடி வந்து அஞ்சல் வாக்குகளைச் சேகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில், மூத்த குடிமக்கள் (85)மற்றும் வரையறுக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குப்பதிவு வருகின்ற 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டது. அதில் வீட்டிலேயே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 8947 வாக்காளர்களுக்கு வீட்டிலேயே வாக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அவர்களுடைய வீட்டிலேயே அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் விதமாக ஒரு நுண்பார்வையாளர் வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர்- 2 ஒரு காவலர் ஒரு காட்சிப்பதிவாளர் வண்டியுடன் கூடிய ஒரு ஓட்டுநர் என 6 நபர்கள் கொண்ட குழு வீதம் 36 நிலையான குழுக்கள், 4 ரிசர்வ் குழுக்கள் என மொத்தம் 100 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 35 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆகியோருக்கு 16, 17, 18 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரு குழுவானது நாள் ஒன்றிற்கு சுமார் 40 வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப்பதிவை மேற்கொள்வர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டிற்கு முன்கூட்டியே சென்று வாக்களிக்கும் நாள் மற்றும் நேரத்தை தெரிவிப்பார்கள். இந்தவகை வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அவசர நிமித்தம் காரணமாக வீட்டில் இல்லையென்றால் அவருக்கு மீண்டும் ஒருமுறை மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி குழு மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அவரது வாக்கினை பதிவு செய்வார்கள்.
குறிப்பிட்ட நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் அடங்கிய குழு நேரடியாக வாக்காளரின் வீட்டிற்கு சென்று வாக்குச்சீட்டினை வழங்குவார்கள். இதன்பின்னர் சம்பந்தப்பட்ட வாக்காளர் ரகசியமாக வாக்களிப்பதை உறுதி செய்து உறுதி மொழிப்படிவத்துடன் வாக்குச்சீட்டை அதற்கான பெரிய உறையில் வைத்து ஒட்டி வாக்குப்பெட்டியில் வாக்காளர்கள் செலுத்துவார்கள்.
வாக்குப்பதிவு செய்யும் குழுவினர் ஒவ்வொரு நாளும் வாக்காளரின் வீடுகளுக்கு செல்கின்ற நான். நேரம் மற்றும் செல்லும் பாதை அட்டவணை முன்கூட்டியே வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும் இந்த வாக்குப்பதிவு நிகழ்வினை வேட்பாளர்கள் அல்லது அனுமதி பெற்ற முகவர்கள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி பார்வையிடலாம்.
இந்த வாக்குப்பதிவு நிகழ்வு அனைத்தையும் வாக்காளரின் வாக்குப்பதிவு இரகசியத்தன்மை பாதிக்கப்படாமல் காட்சிப்பதிவாளர் ஒளிப்பதிவு மேற்கொள்வார்கள். இவ்வாறாக அன்றைய தினம் முழுவதும் சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய சீலிடப்பட்ட பெட்டியினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்படி குழு அலுவலர்கள் வழங்குவார்கள். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு அதன் எண்ணிக்கையினை பதிவேட்டில் பதிவு செய்து அதற்கான பாதுகாப்பு அறையில் (Strong Room) வைத்து சீலிடப்படும்.
-
46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கில்.. தவெக வேட்பாளருக்கு புது சிக்கல்.. இதை கவனிச்சீங்களா.. போச்சே -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
என்ன இன்னைக்கு ரொம்ப ஜாம் ஆகுது! சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்! அடுத்து ட்விஸ்ட்! -
சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
திமுக வேட்பாளருக்கே ‘ஸ்கெட்ச்சா? தொண்டாமுத்தூரில் யாரும் எதிர்பார்க்கலையே.. பின்னணியில் எஸ்பி வேலுமணி?












Click it and Unblock the Notifications