சென்னையில் நாளை மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு.. உங்கள் ஏரியா இருக்கா? இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக நாளை (செவ்வாய்கிழமை) சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு நிறுத்தப்படும் மின்சாரம் மதியம் 2 மணி வரை வராது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணி நடைபெறும் இடங்களில் மின்வாரியம் சார்பில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அந்த வகையில் ஆகஸ்ட் 27 ம் தேதியான நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் தடைப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 27.08.2024ல் அம்பத்தூர், செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏரியாவின் சில இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிந்த பிறகு மதியம் 2 மணிக்குள் மின்சாரம் மீண்டும் விநியோகம் செய்யப்படும்.
அம்பத்தூர்: எஸ் & பி லிவிங் ஸ்பேஸ் மற்றும் எசென்ஸ், ஜிசன் காலனி, கேலக்ஸி ரோடு, பொன்னியம்மன் நகர், வானகரம் ரோடு, ராஜன் குப்பம், விஜிஎன் மகாலட்சுமி நகர், எஸ் அண்ட் பி ரெசிடென்ஸி, மெட்ரோ சிட்டி பேஸ் I மற்றும் II, வெள்ளாளர் தெரு, பாடசாலை தெரு, பிகேஎம் தெரு, இருளர் காலனி, எட்டீஸ்வரன் கோவில் தெரு, செட்டி மெயின் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
செம்பரம்பாக்கம்: நசரத் பேட்டையின் அனைத்து இடங்கள், மேப்பூர், வரதராஜபுரம், பெங்களூர் டிரங்க் ரோடு, செம்பரம்பாக்கத்தின் ஒரு பகுதி, திருமழிசையின் ஒரு பகுதி, மலயாயம்பாக்கம், அகரம்மேல் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ரெட்ஹில்ஸ்: பாடியநல்லூர்,ஜோதி நகர், கல்பகா நகர் மருதுபாண்டி நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications