Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி கார், பைக் மட்டுமல்ல.. சென்னையில் களமிறக்கப்படும் ஏர் டாக்சி.. சல்லுன்னு போகலாம்.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு போக்குவரத்து திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த மாஸ்டர் பிளானின் அடிப்படையில் சென்னையில் ஏர் டாக்சி கொண்டு வரப்படும்.

சென்னை துறைமுகம்-பரந்தூர்-மாமல்லபுரம் திருப்பதியை மையமாக கொண்டு மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் ஏர் டாக்ஸி சேவை கொண்டு வரப்படும். ஏர் டாக்சி என்பது சிறிய ரக விமானம் மூலம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வது. அதிகபட்சம் 4-8 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானங்கள் இதில் பயன்படுத்தப்படும்.

metro

சென்னை மாநகருக்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பரிந்துரைகளை தமிழ்நாடு அரசிடம் வழங்கிய CUMTA நிறுவனம். சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளில்.. 346 புதிய பேருந்து நிறுத்தங்கள், 30 புதிய பஸ் டிப்போக்கள் அமைக்கப்படும். கோயம்பேடு - பூந்தமல்லி, பல்லாவரம் - குன்றத்தூர், வண்டலூர் - கேளம்பாக்கம் வழித்தடங்களில் நியோ மெட்ரோ சேவை ஏற்படுத்தப்படும்.

தியாகராய நகர்-நுங்கம்பாக்கம்-நந்தனம் லைட் ஹவுஸ் இடையே டிராம் சேவை ஏற்படுத்தப்படும். தாம்பரம்-அடையாறு, பெருங்களத்தூர் -மாதவரம் (புறவழிச் சாலை வழியே) புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும். சென்ட்ரல் - கோவளம் - மாமல்லப்புரம் தடத்தில் இரு கட்டங்களாக வாட்டர் மெட்ரோ சேவை அமைக்கப்படும்.

சென்னை துறைமுகம்-பரந்தூர்-மாமல்லபுரம் திருப்பதியை மையமாக கொண்டு மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் ஏர் டாக்ஸி சேவை அமைக்கப்படும். எண்ணூர் - சிங்கப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் ஆகிய புதிய வழித் தடங்களில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும்.

சென்னை போக்குவரத்து

சென்னை பெருநகரப் பகுதிக்கான ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான விரிவான போக்குவரத்துத் திட்டத்திற்கு (CMP) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டம், சென்னையின் போக்குவரத்து திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் 25 ஆண்டு கால செயல் திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ திட்டத்தை விரிவு செய்வதற்கான மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டது.

நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) இரண்டாவது கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த CMP திட்டத்தின்படி, சென்னை மெட்ரோவின் தற்போதைய 172 கி.மீ. தூர மெட்ரோ ரூட், 2048-ம் ஆண்டுக்குள் 444 கி.மீ. ஆக விரிவுபடுத்தப்படும்.

444 கிமீ தூரத்திற்கு விரிவாக்கப்படும் மெட்ரோ

இதில் தற்போது நடைபெற்று வரும் 54 கி.மீ. முதல் கட்டப் பணிகளும், 118 கி.மீ. இரண்டாம் கட்டப் பணிகளும் அடங்கும். கூடுதலாக, 152 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ லைட் ரயில் வலைப்பின்னல் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவை மேம்பாட்டிற்காக, 182 கி.மீ. தூரத்திற்கு புதிய வழித்தடங்களும், தற்போதுள்ள 126 கி.மீ. தூர வழித்தடங்களை நவீனப்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இதுதவிர, 438 கி.மீ. தூரத்திற்கு பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) வலைப்பின்னலும் உருவாக்கப்படும். இந்த BRTS திட்டத்தில் ஆலந்தூர்/தாம்பரம் முதல் பரந்தூர் வரையிலும், காஞ்சிபுரம் முதல் செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி/கடலூர் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி, ஸ்ரீ சிட்டி மற்றும் நெல்லூர் வரையிலும் முக்கிய இணைப்புகள் உருவாக்கப்படும்.

3 வகையான திட்டம்

CMP திட்டம், பணிகளை குறுகியகால, மத்தியகால, மற்றும் நீண்டகாலப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. 2030-க்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக ரூ. 75,976 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நிதி பொதுப் போக்குவரத்து விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, 2040-ம் ஆண்டு வரையிலான திட்டங்களுக்கு ரூ. 95,777 கோடியும், இறுதி கட்டமான 2048-ம் ஆண்டு வரையிலான முதலீடுகளுக்கு ரூ. 40,768 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+