ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்.. மாநில கல்லூரி மாணவர்கள், சென்னையில் போராட்டம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் முறையிட்டது.

இந்த விவகாரத்தில் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் மாணவர்கள் தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கக்கோரியும் அவர்கள் போராட்டத்தின் போது வலியுறுத்தினர்.
போராட்டத்தின் போது, மாணவர்களை காவல்துறை துணை கொண்டு கல்லூரி முதல்வர் அச்சுறுத்தியதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். போராட்டத்தை தலைமை தாங்கிய மாணவர் மாரி என்பவரை காவல்துறை துணை கொண்டு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தனியாக அழைத்து சென்றதால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications