சென்னையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மிகப்பெரிய மோசடி.. ஆடிப்போன வங்கி தலைமை நிர்வாகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே எந்த வங்கியாக இருந்தாலும் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வணிக கடன் உள்பட எந்த கடனாக இருந்தாலும் தர முடியும். இந்த ஆவணங்களை வங்கி கிளையின் மேலாளர்கள் தான்சோதிப்பார்கள். அவர்களை மண்டல அதிகாரிகள் சோதிப்பார்கள், அவர்களை தேசிய அளவில் சோதிப்பார்கள்.இது நடைமுறை. தனியார் வங்கி மேலாளர் ஒருவர்
போலி ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் வாங்கி பெரிய அளவில் மோசடி செய்துள்ளார். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

வங்கிகள் கடன் தருவதற்கு பல தகுதிகளை நிலை வைத்துள்ளன. தனிநபர் கடனை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்க வேண்டும். சிபி சிபில் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். கடனை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.இப்படி பல்வேறு விதிகள் உள்ளன. அதேபோல் வீட்டுக்கடன், வணிககடன் என எல்லாமே இதேபோல் தான் சிபில் நன்றாக இருக்க வேண்டும். இதில் மோசடி நடைபெற வேண்டும் என்றால் வங்கி மேலாளரின் கவனக்குறைவு அல்லதுஅவரை ஏமாற்றுவது என ஏதாவது ஒன்று நடந்திருக்கும். சென்னையில் பிரபல வங்கியில் மேலாளரே பெரிய மோசடி செய்து சிக்கியுள்ளார்.

Chennai private bank manager committing a huge loan fraud How did he get caught

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபலமான தனியார் வங்கி ஒன்றில் மண்டல மேலாளராக இருக்கும் வெங்கடேசன் என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், சென்னை திருவொற்றியூர், கிழக்கு எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகேந்திரகுமார் (வயது 34) என்பவர் அமைந்தகரையில் உள்ள எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக இருந்தார். இவர், அவரது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடியே 76 லட்சத்து 9 ஆயிரத்து 172 வரை கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறார் என்பதை கண்டுபிடித்துள்ளோம்.

எனவே, எங்களது வங்கியில் கடன் பெற்று வங்கிக்கும், பொது மக்கள் பணத்துக்கும் நஷ்டம் ஏற்படுத்தி பணம் கையாடல் செய்து சட்ட விரோதமாக சுயலாபம் அடைந்த மகேந்திரகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் விஜயலட்சுமி (54) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேந்திரகுமார் அவரது தாயார் உடன் சேர்ந்து விற்பனை மேலாளர் பதவியை தவறாக பயன்படுத்தி வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+