53 வயசுல விபச்சாரம்.. யாரிந்த சைதாப்பேட்டை புவனேஸ்வரி? அமிஞ்சிக்கரையிலும் சேட்டை! சென்னை போலீஸ் செம
சென்னை: தமிழகத்தில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், போலியாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், ஸ்பா சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்து வருகிறார்கள்.. இந்நிலையில், மீண்டும் சாட்டையை சுழட்டி வருகிறது காவல்துறை.. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்..
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன.. ஓட்டல்கள், ரிசார்ட்கள், லாட்ஜ்கள் மட்டுமல்லாமல், வாடகைக்கு குடியிருப்பது போல, வீட்டில் தங்கியிருந்தும் சிலர் விபச்சார தொழிலை நடத்துகிறார்கள்.. அதேபோல அப்பார்ட்மென்ட்களிலும் இப்படியான விபச்சாரம் அதிகளவில் நடக்கின்றன.

புகார்கள் - கைது
எனவே, அந்தந்த பகுதி மக்கள், சந்தேகத்துக்கிடமானவர்கள் தென்பட்டால், உடனடியாக போலீசாருக்கு நேரடியாக புகார்களை தெரிவித்துவிடுகிறார்கள். இந்த புகார்களை விசாரிக்கும் போலீசார், புகாரில் உண்மையிருக்கும் பட்சத்தில், தயவுதாட்சண்யமின்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர்..
பிழைப்புக்காக உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் அப்பாவி பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதால், அப்பெண்களையும் பாதுகாப்பாக மீட்டு அரசு காப்பகங்களிலும் ஒப்படைத்து வருகின்றனர்.
லைசென்ஸ் கேன்சல்
மேலும், முறையான அனுமதி இல்லாமல், அல்லது லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், செயல்பட்டு வரும் ஸ்பா சலூன்களையும் பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினமும் 2 அப்பாவி பெண்களை, ஒரு வீட்டிலிருந்து போலீசார் மீட்டிருந்தனர்.. சென்னை சைதாப்பேட்டை குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி இளைஞர்கள் அதிகளவில் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மினுக்கு அப்பகுதி மக்கள், புகார்களை தந்திரந்தனர்.
இந்த புகாரின்படி விபச்சார தடுப்பு பிரிவு- 2 இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை மசூதி பள்ளம் 2வது தெருவிலிருந்த அந்த குறிப்பிட்ட வீட்டை கண்காணித்தனர். அப்போது அங்கு இளைஞர்கள் சிலர் வந்து சென்றது உறுதியானது.உடனே அதிரடியாக பெண் போலீசார் உதவியுடன் வீட்டிற்குள்
புகுந்து சோதனையை போலீசார் மேற்கொண்டனர்.. அப்போது, மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலியல் புரோக்கர் புவனேஸ்வரி என்ற 53 வயது பெண், 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
53 வயசுல புவனேஸ்வரி
உடனே, போலீசார் புவனேஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து வாடிக்கையாளர்களை பிடிக்க பயன்படுத்திய செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 2 இளம் பெண்களை மீட்ட போலீசார், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது செய்யப்பட்ட பெண் புரோக்கர் புவனேஸ்வரி ஜெயிலில் உள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு பெண்இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை தந்த நிலையில், நேற்றும் ஒருவர் கைதாகி உள்ளார்.. சென்னை அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் , அப்பார்ட்மென்ட் ஒன்றில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர்கள் வந்து செல்வதாக விபச்சார தடுப்பு பிரிவுக்கு புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் பேரில் உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவுப்படி விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது, மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜான் கிறிஸ்டியன் (33) என்பவர், தனது தோழிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
புரோக்கர்கள் எங்கே
பிறகு கிறிஸ்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாமல்லபுரம் பகுதியில் பணியாற்றும் இளம்பெண்களை தன்னுடைய தோழிகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3000 பேரம் பேசி வரவழைத்து, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது..
இந்த இளம்பெண்களை கிறிஸ்டியனிடம் அறிமுகப்படுத்துவதற்காகவே, புரோக்கர்கள் இருக்கிறார்களாம். அவர்களையும் போலீசார் தற்போது தேடி வருகின்றனர். மேலும் அப்பார்ட்மென்ட்டிலிருந்த மீட்கப்பட்ட இளம்பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications