எங்க என் மீது கேஸ் போடு.. சவால்விட்ட சீமான் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பாய்ந்தது வழக்கு!
சென்னை: சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சீமான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்தி பாடல் பாடினார்.

அத்துடன் நிற்காமல், தமது செல்போன் பதிவுகளை போலீசார் ஒட்டுக் கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் ஒருமையில் விமர்சித்தார். பொது மேடைகளில் பேசக் கூடாத வார்த்தைகளை பயன்படுத்தியும் போலீஸ் அதிகாரிகளை சீமான் விமர்சித்தார். மேலும் தம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியுமா? எனவும் சவால்விட்டார்.
நாங்க காளியம்மாளை பிசுறுன்னு சொல்லுவோம்.. அதுல உனக்கு என்ன ****? மேடையிலேயே சீறிய சீமான்!
தமது உள்கட்சி விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டுப் பேசுகையிலும் கொச்சையான வார்த்தைகளை சீமான் பயன்படுத்தி இருந்தார். அத்துடன் தம்மால்தான் தமிழ்நாடு அரசு முருகன் மாநாடு நடத்துகிறது; தமிழில் பெயர் பலகைகளை வைக்க வணிகர் சங்கத்தினரை கேட்டுக் கொள்கிறது எனவும் சுட்டிக்காட்டி இருந்தார். 2026 சட்டசபை தேர்தலுக்கு 17 மாதங்கள்தான் இருக்கிறது; அதற்கு தயாராவோம் எனவும் சீமான் பேசினார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமார், தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற பேச்சுகளைச் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் அவருக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். அவரது பொய்யான கருத்துகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். பொது மேடையில் இதுபோன்ற கொச்சையான பொய்களைப் பேசினால் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
என் போனை எடுத்து பாரு.. உங்களை *** ***னு பேசுனதுதான் இருக்கும்.. மேடையில் பரபரப்பை கிளப்பிய சீமான்!
இந்த நிலையில் சென்னையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications