என் போனை எடுத்து பாரு.. உங்களை *** ***னு பேசுனதுதான் இருக்கும்.. மேடையில் பரபரப்பை கிளப்பிய சீமான்!
சென்னை: இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் சர்ச்சைக்குரிய பாடலை பாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியை கடுமையாக விமர்சிக்கும் வகையில் பாடியுள்ளார் சீமான். மேலும், சில வார்த்தைகளையும் சீமான் பேசியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்துப் பேசிய நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி பற்றி நாகூர் ஹனீபா பாடிய பிரபலமான பாடலின் வரிகளை மாற்றி மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடினார்.

சாட்டை துரைமுருகன், சண்டாளன் என்ற வார்த்தையை, குறிப்பிட்ட சாதி மக்களை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தியதாக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய துரைமுருகனை, இதுபோன்று பேசக்கூடாது என நீதிமன்றம் கண்டித்து விடுவித்தது.
எனினும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து, அதே வார்த்தையை பயன்படுத்தி, பத்திரிகையாளர் சந்திப்புகளில் கருணாநிதி பற்றி பாடி வந்தார். இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் அந்த சர்ச்சைக்குரிய பாடலை பாடியுள்ளார் சீமான்.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகனை பற்றி 20 நிமிடங்கள் பேசுவாரா ஸ்டாலின்? சீமான் ஆவேச பேச்சு!
எனினும், சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் மாற்றிப் பாடியுள்ளார் சீமான். மேலும் பேசிய அவர், இப்போதெல்லாம் மாவட்ட ஆட்சியர்கள், சில நீதிபதிகள் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள் போலவே இயங்குகிறார்கள். ஊழலைப் பற்றி பேசுங்கள், ஏன் ஒருவரை பற்றி பேசுகிறீர்கள் எனக் கேட்டார் நீதிபதி.
அதனால் தான் கருணாநிதியை பற்றி பேசுகிறோம். பிரிக்க முடியாதது ஊழலும் கருணாநிதியும். அந்தப் பாடலை வைத்து 10 - 15 நாட்களை ஓட்டிவிட்டார்கள். சண்டாளன் என பாடக்கூடாது என்று, சரி பாடவில்லை. வேறு பாட்டு பாடுவோம். இந்தப் பாட்டு இன்று முதல் உலகப் புகழ் பெறும், பலரின் அழைப்பு ஒலியாக இருக்கும். என் மீது ஒரு வழக்கைப் போடுங்கள். என் செல்போனை எடுத்து பாருங்கள்.. உங்களை **** **** என பேசியது தான். இதெல்லாம் சேட்டை **** தானே?” எனப் பேசியுள்ளார் சீமான்.
தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications