சென்னையை மிரட்டிய சைக்கோ கொலையாளி.. பொறி வைத்து பிடித்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மக்களையும் மது பிரியர்களையும் மிரட்டி வந்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார். மானாமதுரை ரயில் நிலையம் அருகே போலீசார் சைக்கோ கொலையாளியை மடக்கிப்பிடித்துள்ளனர்.

ஆண்டுதோறும் சைக்கோ கொலையாளி ஒருவர் சென்னையை மிரட்டுவதும் மக்கள் தூக்கத்தை தொலைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் சைக்கோ கொலையாளி ஒருவர் சென்னை மக்களை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அச்சுறுத்தி வந்தார்.

ஆனால் இந்தமுறை சைக்கோ கொலையாளியின் குறி மது பிரியர்கள் மீது. சாலையோராம் இரவில் மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களை குறி வைத்தே வேட்டையை தொடங்கினான் சைக்கோ கொலையாளி.

ஆணுறுப்பு துண்டிப்பு

ஆணுறுப்பு துண்டிப்பு

ரெட்டேரியில் பாலத்தின் கீழ் கடந்த மாதம் 26ஆம் தேதி மதுபோதையில் மயங்கி கிடந்தார் அஸ்லம் பாஷா. இதனைக் கண்ட சைக்கோ கொலையாளி அவரது ஆணுறுப்பை துண்டித்தான்.

மற்றொருவர் மீது தாக்குதல்

மற்றொருவர் மீது தாக்குதல்

இதில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லம் பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்த இரண்டு நாட்களில் அதே பகுதியில் மதுபோதையில் படுத்திருந்த நாராயணன் என்பவரின் ஆணுறுப்பும் துண்டிக்கப்பட்டது.

தீவிரமாக இறங்கிய போலீஸ்

தீவிரமாக இறங்கிய போலீஸ்

இதனால் பீதியடைந்தனர் அப்பகுதி மக்கள். நிச்சயம் இது சைக்கோ கொலையாளியின் வேலைதான் என்பதை யூகித்த போலீஸ் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

வீடியோ வெளியிட்ட போலீஸ்

வீடியோ வெளியிட்ட போலீஸ்

சைக்கோ கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சைக்கோ கொலையாளியின் வீடியோவை வெளியிட்டனர் போலீஸ்.

 மானாமதுரையில் கைது

மானாமதுரையில் கைது

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த நிலையில் சைக்கோ கொலையாளி முனியசாமி இன்று கைது செய்யப்பட்டார். மானாமதுரை ரயில் நிலையம் அருகே சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் தீவிரம்

போலீசார் தீவிரம்

இதைத்தொடர்ந்து சைக்கோ கொலையாளியை சென்னை கொண்டுவந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை மக்கள் நிம்மதி

சென்னை மக்கள் நிம்மதி

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை மக்களின் தூக்கத்தை கெடுத்து பீதியை ஏற்படுத்திவந்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+