சென்னை கேபி பார்க் அடுக்குமாடி கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது.. அறப்போர் இயக்கம் புகார்
சென்னை: சென்னை புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது என்றும் மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
அறப்போர் இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: " கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு செட்டிங் செய்து கொடுக்கப்பட்ட டெண்டர் மூலம் PST நிறுவனம் கட்டிய கட்டிடம் தான் புளியந்தோப்பு KP park குடியிருப்பு கட்டிடங்கள். இதை கட்டி முடித்த சில மாதங்களிலேயே பூச்சுவேலைகள் இடிந்து விழுவதாக புகார் வந்ததை அடுத்து அப்பொழுது ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த திமுக அரசு IIT ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்த குடியிருப்பில் பயன்படுத்தப்பட்ட பூச்சு வேலை 90% தரமற்றது என்று முடிவு வெளியிடப்பட்டது.

ஆய்வறிக்கை அடிப்படையில் கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று வீர வசனம் பேசிய அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் அந்த அறிக்கை வந்த பிறகு இந்த கட்டிடம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தற்பொழுது அந்த கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது. மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது.
தினமும் அங்கே மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியேறி போக அவர்களுக்கு வேறு இடமும் கிடையாது. ஆனால் இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த PST நிறுவனம் கோடிகளில் புரள்கிறது. திமுக ஆட்சியிலும் அரசு பணிகளை டெண்டர் எடுத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு செட்டிங் செய்து கொடுக்கப்பட்ட டெண்டர் மூலம் PST நிறுவனம் கட்டிய கட்டிடம் தான் புளியந்தோப்பு KP park குடியிருப்பு கட்டிடங்கள். இதை கட்டி முடித்த சில மாதங்களிலேயே பூச்சுவேலைகள் இடிந்து விழுவதாக புகார் வந்ததை அடுத்து அப்பொழுது… pic.twitter.com/wacIFSGnbg
— Arappor Iyakkam (@Arappor) February 7, 2024
இந்த தரமற்ற கட்டிடத்தை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் எந்த வித கூச்சமும் இல்லாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நடவடிக்கை எடுப்பதாக சட்டசபையில் முழங்கிய அமைச்சர் அன்பரசன் இதை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
PST நிறுவனம் கருப்பு பட்டியல் இடம் பெற செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதும் இதை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மீதும் FIR போடப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்." இவ்வாறு அறப்போர் இயக்கம் அறிக்கையில் கூறியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications