"ஏகப்பட்ட பெண்களுடன்".. முறைமாமனின் யோக்கியதை.. வீடியோ வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
சென்னை: சென்னை புழல் அருகே திருமணம் நடக்க இருந்த கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்ணின்
வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை புழலை அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவரது மகள்
ஜன்னதுல் பிர்தௌஸ்.
இவருக்கு பெற்றோர்கள் அவரது முறைமாமனை திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து அதற்குண்டான பணிகளில் ஈடுபட்டு திருமண வேலைகள் ஜரூராக நடந்து வந்தன.

செல்போன்
இந்நிலையில் மணப்பெண் அவரது செல்போனில் இருந்து வாட்ஸ் அப் மூலம் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனவும் தனக்கு திருமணம் செய்து வைக்க உள்ள முறைமாமன் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும் தெரிவித்திருந்தார்.

பெற்றோர்
மேலும் இந்த திருமணத்தை எனது உறவினர்களும் பெற்றோர்களும் கட்டாயப்படுத்தி எனது விருப்பம் இல்லாமல் நடத்தி வைக்க முயற்சிப்பதாக கூறியுள்ளனர். மேலும் இந்த திருமணம் நடைபெற்றால் அதன் பிறகு தான் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் உருக்கமாக வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

புழல் காவல் நிலையம்
இந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில் இதுகுறித்து அந்தப் பெண் புழல் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இதனையடுத்து புழல் போலீசார் திருமணம் நடக்க இருந்த இன்று காலையில் அவரது வீட்டிற்கு சென்று சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மணப்பெண்
திருமணம் நடைபெற இருந்த ஒரு மணி நேரத்தில் மணப்பெண் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications