இப்படியுமா நடக்கணும்.. சென்னையில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார கேபிள்.. தூய்மைப் பணியாளர் பலி
சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கண்ணகி நகர் பகுதியில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக ஏராளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பாரிஸ், அடையாறு, ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகர், ராஜா அண்ணாமலை புரம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்த மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கண்ணகி நகரில் தூய்மைப் பணியாளர் வரலட்சுமி என்பவர் இன்று காலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு சாலையில் மழைநீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் வரலட்சுமி தூய்மைப் பணியில் ஈடுபட்ட நிலையில், மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications